📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 16, 2026 12:01 PM

கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் காலாவதியாகிறதா ? பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன ? நிபுணர்கள் ஆலோசனை

கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் காலாவதியாகிறதா ? பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன ? நிபுணர்கள் ஆலோசனை

பண்டிகை காலத்தில் மக்கள் பரபரப்பாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் பண்டிகை கால ஷாப்பிங் என்பது களைகட்டி வருகின்றது. இந்த பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல தள்ளுபடிகள், சலுகைகள் கொடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் தான் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, சலுகைகளை பார்த்து பயன்படுத்தி கொள்வது என்பது அவசியம். முக்கியமாக கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்கள் இந்த பண்டிகை காலங்களில் ரிவார்டு பாயிண்ட்ஸை திறன்பட பயன்படுத்துவது அவசியம்.இல்லையென்றால் நாம் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்நிலையில் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த ரிவார்டு பாயிண்ட்ஸ் காலாவதியாக இருப்பதாக நமக்கு மெசேஜ் வரும். வாடிக்கையாளர்கள் பலர் ரிவார்டு பாயிண்ட்ஸ் காலாவதியாக போகிறதே என்ற பதட்டத்தில் அதனை பயன்படுத்த எதாவது ஒரு பொருளை வாங்க நினைப்பார்கள்.அந்த பொருள் அவர்களுக்கு அவசியமாக இருந்தால் பரவாயில்லை. அதுவே அவசியமில்லாத ரிவார்டு பாயிண்ட்ஸ் காலாவதியாகிறதே என்ற பதட்டத்தில் ஒரு பொருளை வாங்கினால் நமக்கு நஷ்டம் தான் ஏற்படும். இதற்கு பெயர் தான் reward trap என நிபுணர்கள் சொல்கின்றனர்ரிவார்டு பாயிண்ட்ஸ் மதிப்புஒரு ரிவார்டு பாயிண்டின் மதிப்பு என்பது 25 பைசா தான். எனவே உங்களிடம் இருக்கும் 2000 ரிவார்டு பாயிண்ட்ஸ் காலாவதியாகிறது என்றால் அதன் மதிப்பு என்பது 500 ரூபாய் தான். அதனை பயன்படுத்த வேண்டும் என்ற அவசரத்தில் தேவையற்ற ஒரு பொருளை 1000 ரூபாய்க்கு வாங்கினால் நமக்கு 500 ரூபாய் என்பது நஷ்டம் தான்ரிவார்டு பாயிண்ட்ஸை பயன்படுத்தும் ஸ்மார்ட் வழிகள்சில நிறுவனங்களில் ரிவார்டு புள்ளிகளை நாம் பில் தொகைகளில் இருந்து கழித்துக்கொள்ளலாம். எனவே ரிவார்டு பாயிண்ட்ஸை பில் தொகையை குறைக்க பயன்படுத்தலாம்மின்சாரம், மொபைல் கட்டணங்களை செலுத்த கூட நாம் ரிவார்டு பாயிண்ட்ஸை பயன்படுத்தலாம்பண்டிகை காலங்களில் ஊருக்கு செல்ல டிக்கெட் புக் செய்வதற்கு கூட ரிவார்டு பாயிண்ட்ஸை பயன்படுத்தலாம்அவசியமான பொருட்களை வாங்குவதற்கு தாராளமாக நாம் ரிவார்டு பாயிண்ட்ஸை பயன்படுத்தலாம். அதனால் நமக்கு லாபம் மட்டுமே கிடைக்கும்.இவ்வாறு ரிவார்டு பாயிண்ட்ஸ்களை நாம் லாபகரமாக பயன்படுத்தி நஷ்டத்தை தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது