📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 12:03 AM

முதலமைச்சர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளி: அதிமுக மாவட்டச் செயலாளர் குற்றச்சாட்டு

முதலமைச்சர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளி: அதிமுக மாவட்டச் செயலாளர் குற்றச்சாட்டு

முதலமைச்சர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளி: அதிமுக மாவட்டச் செயலாளர் குற்றச்சாட்டு

தாராபுரம்: முதலமைச்சர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளி என்று அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.

இது குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமார் பேசியபோது, 'நேற்று முதல்வர் விஜய்யின் ரோடு ஷோ (Roadshow) நடந்தது. அந்த ரோடு ஷோ நிகழ்வில், கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற பெயரில், 'ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், வெளியூர் மாவட்டச் செயலாளர்களும் இத்தனை பேரை அழைத்து வர வேண்டும்' என்ற இலக்கைக் (டாஸ்க்) கொடுத்துக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். தாராபுரம் மக்கள் அந்த ரோடு ஷோவில் கலந்து கொள்ளவில்லை என்பது பொதுமக்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் மற்றும் முதல்வர் விஜய்க்கும் நன்றாகத் தெரியும்' என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, கடந்த 26 ஆம் தேதி காவல்துறை ஒரு FIR பதிவு செய்தது. அந்த FIR-இன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளால் தீவிரமாகத் தேடப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். முதல்வர் விஜய்யின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான 'கொட்டிகாமலை' அசோக் FIR இடம்பெற்றுள்ளவர், முதல்வருடன் அவரே வண்டியை ஓட்டிச் செல்லும் அளவிற்கு மிக அருகிலேயே உள்ளார்.

இதுதான் தூய்மையான ஆட்சியா? மேலும், எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்ட அந்த குற்றவாளி ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? இது போடப்பட்ட பொய் வழக்கு என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. இது பொய் வழக்கு என்றால், உள்ளே இருக்கும் அனைவரையும் விடுதலை செய்யுங்கள். இந்த ஆட்சி தூய்மையான ஆட்சி அல்ல, இது ஒரு ரீல்ஸ் (Reels) ஆட்சி. அவர் அதிமுகவில் இருந்தவர். மிரட்டுவதற்காகவே ஒரு மந்திரியை நியமித்துள்ளார்; அதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அதைத் தர வேண்டிய இடத்தில் தருவோம். கொட்டிகாமலை அசோக்கைக் கட்சியில் சேர்த்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், ஆயிரம் பேரை மிரட்டிக் கட்சியில் சேர்த்துள்ளனர் என்று அதிமுக மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்."