📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 07, 2026 05:03 AM

பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கை நிராகரிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு வாதம்

பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கை நிராகரிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு வாதம்

சென்னை: 'சென்னை, பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், முதல்வர் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தலில் சென்னை, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் விஜய், 53,715 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தரப்பில், தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதல்வர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நடந்து வருகிறது.

பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில், எனக்கும், என் மனைவிக்கும் சொந்தமான சொத்து விபரங்கள், வருமான வரி கணக்கு விபரங்கள் என அனைத்தும் கூறப்பட்டு உள்ளன; எந்த தகவலையும் மறைக்கவில்லை. அனைத்து விபரங்களையும் 99 சதவீதம் வேட்புமனுவில் குறிப்பட்டுள்ளேன். ஒரு சில தவறுகள் இருக்கலாம் தான்; அதற்காக வேட்பு மனுவை ஏற்றதே தவறு என சொல்ல முடியாது.

வேட்பு மனுவை ஏற்றது சரிதான். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாமல், எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு வாதிடப்பட்டது. இதையடுத்து, தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த மனுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.