Politics
September 30, 2026 08:02 PM
மதுராந்தகத்தில் கனிமொழி எம்.பி. இன்று பிரச்சாரம்
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக, திமுக எம்.பி.யும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான கனிமொழி இன்று (செப்.30) பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இதன்படி மதுராந்தகம் நகர், கருங்குழி, சரவம்பாக்கம், கீழ் அத்திவாக்கம் கூட்டுச்சாலை பகுதிகளில் வாகன பிரச்சாரமும் பெரும்பேர்கண்டிகையில் மகளிர் கூட்டத்திலும் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
Politics