📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 30, 2026 09:03 PM

சிங்கப்பூரில் மோசடி: தந்தையை ஏமாற்றியவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிங்கப்பூரில் மோசடி: தந்தையை ஏமாற்றியவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிங்கப்பூரில் சொந்தத் தந்தை, நண்பர்கள் உட்பட் 21 பேரை ஏமாற்றிய குற்றத்திற்காக 33 வயது ஆடவருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செபெஸ்டியன் லிம் சியான் ஜி, $3.8 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஏமாற்றிப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

முடங்கிப்போன உணவு வர்த்தகம் தொடர்பில் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட நண்பர் ஒருவருக்கு உதவும் நோக்கில் லிம் குற்றம் புரிந்தார்.

இதற்குமுன் ஆகஸ்ட் மாதத்தில் மோசடித் தொடர்பில் எட்டுக் குற்றச்சாட்டுகளையும் போக்குவரத்துக் குற்றத்தையும் லிம் ஒப்புக்கொண்டார்.

அவருக்கான தீர்ப்பின்போது மேலும் 26 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட சிலரிடம் லிம் கடந்த ஆகஸ்ட் மாதம் கிட்டத்தட்ட $860,000ஐ திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

32 வயது ஜெரால்ட் லீ ஹாய் ருய் என்ற நண்பர், பிற நண்பர்களிடமிருந்து கடன் வாங்கித் தரும்படி லிம்மிடம் கேட்டுக்கொண்டார்.

லீ, ஜெரோய் என்ற நிறுவனத்தின் இயக்குநர். 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் அந்த நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

லீக்கு உதவ சம்மதித்த லிம், 2021ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர்வரை பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் வாங்கத் தொடங்கினார்.

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில், லிம் தமது 59 வயது தந்தையிடம் திட்டம் ஒன்றுக்கு நிதி தேவைப்படுவதாகக் கூறிப் பணம் கேட்டார்.

ஜெரோய் நிறுவனத்துக்குப் பணம் கொடுத்தால் கவர்ச்சிகரமான வட்டி கிடைக்கும் என்று அவர் தந்தையிடம் தெரிவித்தார். அதை நம்பி லிம்மின் தந்தை தமது மூன்று நண்பர்களிடமிருந்து பல்வேறு தருணங்களில் மொத்தம் $430,000 பெற்றுத் தந்தார்.