📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 09:03 PM

மதுராந்தகம் சென்ற முதல்வர் விஜய்- சென்னை

மதுராந்தகம் சென்ற முதல்வர் விஜய்- சென்னை

மதுராந்தகம் சென்ற முதல்வர் விஜய்- சென்னை-திருச்சி தேசிய நெடுஞசாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பரப்புரையை முடித்துக்கொண்டு கிளம்பிய நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3கிலோமீட்டருக்கு போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார். ஜோசப் விஜய் பிரசாரதை முடித்துக்கொண்டு மதுராந்தகதில் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இருந்து புறப்பட்டபோது காவல் துறையினர் மதுராந்தகத்தில் நுழைவுவாயிலில் இருக்கக்கூடிய கருங்குழி பகுதியில் வாகனங்களை தடுத்து நிறுத்திருந்தனர்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்து செல்வதற்கு சுமார் 20நிமிடங்கள் ஏற்பட்ட நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதின் காரணமாக வாகனஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். மேலும் காவல் துறையினர் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என வாகனஓட்டிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.