📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 25, 2026 10:03 PM

கர்நாடக சங்கீதமா? கானாவா எது உயர்ந்தது.. மீசைய முறுக்கு 2 எப்படி இருக்கு? செய்யாறு பாலு ரிவ்யூ!

கர்நாடக சங்கீதமா? கானாவா எது உயர்ந்தது.. மீசைய முறுக்கு 2 எப்படி இருக்கு? செய்யாறு பாலு ரிவ்யூ!

சென்னை: ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மீசைய முறுக்கு' படத்தின் இரண்டாம் பாகமான 'மீசைய முறுக்கு 2' ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. தாத்தா, மகன், பேரன் என மூன்று தலைமுறைகளை சேர்ந்த கானா பாடகர்களின் வாழ்க்கையையும், இசையுலகில் அவர்கள் சந்திக்கும் சமூக பாகுபாடுகளையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு அளித்த விமர்சனம்.

மீசைய முறுக்கு 2: உயர்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கர்நாடக சங்கீதத்தை உயர்வாக பார்ப்பதும். கானா, நாட்டுப்புறப் பாடல், தப்பாங்குத்து போன்ற இசை வடிவங்களுக்கு உரிய அங்கீகாரம் தராமல் ஒதுக்கவது தான் இந்த படத்தின் மையக்கரு. கானா பாடகர்களுக்கு பெரிய இசை அரங்குகளிலோ, சபாக்களிலோ வாய்ப்பு தராமல் பீச்சிலும், ரோட்டோரத்திலும், சாவு வீட்டிலும் மட்டுமே பாட வைக்கும் நிலையை படம் அழுத்தமாக காட்டுகிறது.

படத்தின் கதை: தாத்தா ஹிப்ஹாப் ஆதிக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும் போது, இசை சக்கரவர்த்தி சேஷாத்திரியாக வரும் நாசர் அவரை பாடவிடாமல் தடுத்து அவமானப்படுத்தி வெளியேற்றுகிறார். இதனால் கடுப்பாகும் தாத்தா, நான் ஜெயித்துக் காட்டுகிறேன் என சபா வாசலில் நின்று சபதம் செய்கிறார். அதன்பிறகு பேரன் ஹிப்ஹாப் ஆதி காலத்திற்கு கதை வருகிறது. மீனவர் சமூகத்தை சேர்ந்த அவருக்கும் டிஜேக்கள், பப்களில் அதே பாகுபாடு தொடர்கிறது. 'நீ எந்த ஏரியா? அங்கேயே நில்' என ஒடுக்கினாலும், ஆதி அதை உடைத்து ராப் பாடல்கள் பாடி ஜெயித்துக் காட்டுகிறார்,

தேவா, இளையராஜா ஜெயிச்ச கதை தெரியாதா?: ஒரு காலத்தில் கர்நாடக சங்கீதம் மட்டுமே உயர்வாக பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதே காலத்தில் இருந்து வந்த இளையராஜா எப்படி 'இசைஞானி' ஆனார்? நொச்சிக்குப்பத்தில் இருந்து வந்த தேவாவும் அவரது சகோதரர்களும் எப்படி மிகப்பெரிய இசையமைப்பாளர்களாக உருவானார்கள்? இசைக்கு இடம் முக்கியமில்லை, அதன் மதிப்பு தான் முக்கியம். இதுவும் இந்த காலத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்தது நெருடலாக இருக்கிறது.

நம்பகத்தன்மை குறைபாடு: கதைக்களத்தில் சில இடங்களில் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக யோகி பாபு படத்தில் எதற்காக வருகிறார், எதற்காக சிரிக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. கருணாஸ், பாபா பாஸ்கர், யோகி பாபு ஆகியோரின் நடிப்பு ஒரு கட்டத்திற்கு மேல் ஓவர் ஆக்டிங்காக மாறி எரிச்சலூட்டுகிறது.

பிளஸ் பாயிண்ட்: படத்தில் தனியாக வில்லன் என்று யாரும் இல்லை, சூழ்நிலையும் சிஸ்டமுமே வில்லன் என படத்தை எடுத்து இருக்கிறார் தேவையில்லாமல் பட நீளத்தை இழுக்காமல் 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முடித்தது புத்திசாலித்தனமான முடிவு. இதுதான் படத்தின் பிளஸ் பாயிண்ட், விருப்பமிருந்தால் படத்தை போய் பாருங்கள் என செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் பேசி உள்ளார்.