📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 25, 2026 10:03 PM

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி; 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் அசத்தல்

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி; 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் அசத்தல்

அய்ச்சி-நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 2 தங்கம் உள்பட 22 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் ஆடவருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் வெள்ளிப்பதக்ககம் வென்றுள்ளார். அவர் பந்தய தூரத்தை 28:29.38 என்ற நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியா 9வது வெள்ளியை வென்றுள்ளது.

இதேபோல, மகளிர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றார். டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், மனுஷ் ஷா, தியா சிதலே ஆகியோர் அடங்கிய இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

மகளிர் போல் வால்ட் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் போல் வால்ட் பிரிவில் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் 2 தங்கம், 9 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன், பட்டியலில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.