📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 24, 2026 07:05 PM

ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சியில் மின் தடை ஏற்பட்டது ஏன்? மின்சார வாரியம் விளக்கம்

ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சியில் மின் தடை ஏற்பட்டது ஏன்? மின்சார வாரியம் விளக்கம்

மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற கூட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டது. உடனடியாக 'ஜெனெரேட்டர் போடுங்கள்' என்று கூற, ஜெனெரேட்டர் இயக்கப்பட்டதால் ஆதவ் அர்ஜுனா தனது பேச்சை தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மின் பற்றக்குறை இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறி வருகிறார். ஆனாலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படுவது கடும் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்தநிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் தடைபட்டது ஏன் என்பது பற்றி மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மின்சார வாரியம் கூறியிருப்பதாவது:

மின் தடை ஏற்பட்டதாக கூறப்படும் உள்ள பகுதி, 33 கி.வோ. ஓரத்தி துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் 11 கி.வோ. மோகல்வாடி மின்பாதை மூலமாகவே மின்வழங்கலைப் பெறுகிறது. இச்சம்பவம் குறித்து மேற்கொள்ப்பட்ட கள ஆய்வில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மின்விநியோகத்தில் எவ்வித மின்தடையும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில், மின்வாரிய மின் விநியோகத்திலிருந்து 'ஜென்செட்' (Genset) மின்வழங்கலுக்கு மாற்றியமைத்த போது, சில விநாடிகள் மட்டுமே தற்காலிக மின்விநியோக இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டது என்ற புகார் முற்றிலும் தவறானது. ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டது என்ற புகார் முற்றிலும் தவறானது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.