மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: தமிழ் ஓதுவார்கள் புறக்கணிப்பு? அமைச்சர்கள்
மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: தமிழ் ஓதுவார்கள் புறக்கணிப்பு? அமைச்சர்கள் சொல்வது என்ன !
கும்பாபிஷேக விழாவில் சாதிய தீண்டாமை நடைபெறுகிறது; தமிழ் ஓதுவார்கள் அனுமதி குறித்து இணை ஆணையர் எதுவும் தெரிவிக்கவில்லை என்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழ் ஓதுவார்கள் குற்றச்சாட்டு மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு - அமைச்சர் அவர் சார்ந்த சமூகத்தினரை மட்டும் அனுமதிக்க முயல்கிறார்
தமிழ் ஓதுவார்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் 10 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிவடைந்தது. இன்று காலை பரிவார மூர்த்திகளுக்கான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் தமிழ் ஓதுவார்களை கருவறைக்கு அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி சேலம் சத்தியபாமா தலைமையில் தமிழ் ஓதுவார்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு - அமைச்சர் தகவல்
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி