📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 14, 2026 12:04 PM

மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தில் 5

மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தில் 5

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்​டத்​தில் 5-வது வழித்​தடத்​தில் 100 சதவீதம் முன்​கூட்​டியே வார்க்​கப்​பட்ட கட்​டு​மானப் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன.

சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் 5-வது வழித்​தடத்​தில் உள்​ளகரம் - சோழிங்​கநல்​லூர் வரை அமைய​வுள்ள உயர்​மட்ட வழித்​தடப் பகு​தி​யில், முன்​கூட்​டியே வார்க்​கப்​பட்ட கான்​கிரீட் கட்​டு​மானப் பணி​யில் இறுதி ‘யு-கர்​டர்’ வார்க்​கும் பணி வெற்​றிகர​மாக முடிவடைந்​துள்​ளது.

இதன்​மூலம் அனைத்து முன்​கூட்​டியே வார்க்​கப்​பட்ட கூறுகளும் 100% நிறைவு செய்​யப்​பட்டு புதிய சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ் ஒட்​டுமொத்​த​மாக 3,126 முன்​கூட்​டியே வார்க்​கப்​பட்ட கூறுகள் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன.

இதில் ஐ-கர்​டர்​கள் 1,041, யு கர்​டர்கள் 892 ஆகியவை அடங்​கும். வார்க்​கப்​பட்ட 892 யு-கர்​டர்​கள் மூலம், 2-ம் கட்​டத் திட்​டப் பணி​களி​லேயே அதிக அளவில் யு-கர்​டர்​கள் தயாரித்த சாதனை இத்​திட்​டத்​தில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த உள்​கட்​டமைப்பு பணி​களுக்​காக 98,052 கன மீட்​டர் கான்​கிரீட், 18,550 மெட்​ரிக் டன் கம்​பிகள், 3,010 மெட்​ரிக் டன் அதிவலிமை எஃகு கம்​பிகள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இறுதி யு-கர்​டர் வார்ப்​புப் பணி நிறைவு விழா​வில், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் திட்ட இயக்​குநர் தி.அர்ச்​சுனன், கூடு​தல் பொது மேலா​ளர் ஆர். சீனி​வாசன் உள்பட பல்​வேறு உயர் அதி​காரி​கள், பணி​யாளர்​கள் கலந்​து​கொண்​டனர்.

அடுத்​தகட்​டப் பணி​கள்

இறுதி யு-கர்​டர் வார்ப்​புப் பணி வெற்​றிகர​மாக முடிவடைந்​ததைத் தொடர்ந்​து, மீத​முள்ள யு-கர்​டர்​களைப் பொருத்​தும் பணி மற்​றும் மெட்ரோ நிலை​யங்​களின் நுழைவு/வெளி​யேறும் அமைப்​பு​களின் கட்​டு​மானப் பணி​கள் தற்​போது தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்​டம் குறிப்​பிட்ட காலத்​திற்​குள் முடிக்​கப்​படும் வகை​யில், பணி​கள் விரை​வாக முன்​னேறி வரு​கின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.