📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 11, 2026 04:33 PM

மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் 4ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் 4ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

கரூர்:கரூர் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் முன், நேற்று 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

கரூர் மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட ஊதியம், 760 ரூபாய் வழங்க வேண்டும், வாரந்தோறும் ஞாயிறு அன்று விடுமுறை வழங்க வேண்டும். பி.எப்., - இ.எஸ்.ஐ., அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 7 முதல் மாநகராட்சி அ லுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்ததாரர் தரப்பில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும், பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையிலும், ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும் என, நேற்று 4வது நாளாக துாய்மை பணியாளர்கள் கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.