முதல்வர் விஜய்க்கு விழுப்புரம் தி.மு.க., கண்டனம்
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம், வானுார் சட்டசபை தொகுதிகளுக்கான செயற்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, ஆலோசனை வழங்கினார். வானுார் எம்.எல்.ஏ., கவுதம் வரவேற்றார். தலைமை பிரதிநிதிகளான புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா, மாநில மாணவணி செயலாளர் வீரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கண்ணப்பன், மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, இளந்திரையன், தலைமை கழக வழக்கறிஞர் சுவைசுரேஷ் முன்னிலை வகித்தனர். கட்சி மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், 'தமிழக சட்டசபையில், மாண்பினை குறைக்கும் வகையிலும், அநாகரிகமாக பேசிய முதல்வர் விஜயை செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது; வரும் 15ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில், விழுப்புரம் மத்திய மாவட்டம் சார்பில் கட்சியினர் கலந்துகொள்ள வேண்டும்; மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றிக்கு, விழுப்புரம் மத்திய மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பாக பணியாற்ற வேண்டும்; என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
நகர செயலர்கள் சக்கரை, வெற்றிவேல், ஒன்றிய செயலர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், ஜீவா, ராஜா, சந்திரசேகரன், ஜெயமூர்த்தி, முரளி, ராஜி, மைதிலி ராஜேந்திரன், பாஸ்கர், கணேசன், செல்வமணி, சீனுசெல்வரங்கம், புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வாசன், சம்பத், பஞ்சநாதன், இளங்கோவன், நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றிய சேர்மன்கள் சச்சிதானந்தம், உஷா முரளி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிரணி உள்ளிட்ட பிற அணி அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.