'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழும், 2025- ஆம் ஆண்டு வெளியான 'கூலி' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Published : October 7, 2026 at 8:47 PM IST
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழை வழங்கியது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இசையில் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், ரித்விக், எஸ்.ஜே.சூர்யா, சுஜித் சங்கர், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டத் திரைப் பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர் 2'.
இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான மோகன் லால், ஹிருத்திக் ரோஷன், சிவ்ராஜ் குமார், விஜய் சேதுபதி போன்றோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
காவல் துறை அதிகாரி வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாலும், 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் 'Ala Bolelo', 'இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்' ஆகிய பாடல் வரவேற்பைப் பெற்றிருப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் 5-ம் தேதி வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் டிரெய்லரில் அதிரடியான சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
#Jailer2 is censored U/A! 🔥 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #Jailer2FromOct15
'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15- ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் சிறப்புக் காட்சிக்கு இதுவரை 10,000 டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும், கேரளாவில் மொத்தமாக 832 திரைகள் உள்ள நிலையில், 800 திரைகளில் திரைப்படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த தகவலைப் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல், இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் 18 விநாடிகள் ஆகும். யு/ஏ சான்றிதழ் காரணமாக 16 வயதுக்குட்பட்டோர் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் தான் படத்தைப் பார்க்க வேண்டும்.
கடந்த 2023- ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழும், 2025- ஆம் ஆண்டு வெளியான 'கூலி' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.