📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 11, 2026 05:04 PM

ஜெரார்ட் ஈ: பொதுச் சேவையில் ஒரு நீண்ட பயணம்

ஜெரார்ட் ஈ: பொதுச் சேவையில் ஒரு நீண்ட பயணம்

சிங்கப்பூரின் மிகவும் சவாலான பொதுச் சேவை பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டதற்காக ‘மிஸ்டர் ஃபிக்ஸ் இட்’ (சிக்கல்களைத் தீர்ப்பவர்) என்று அழைக்கப்பட்ட ஜெரார்ட் ஈ, தமது நீண்டகாலப் பொதுச் சேவைப் பணிகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஓய்வு பெற்றுள்ளார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று, 77 வயதான இவர் ஒருங்கிணைந்த பாராமரிப்பு அமைப்பின் (ஏஐசி) தலைவர், சுகாதார அமைச்சு குழுமத்தின் இயக்குநர் சபை உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து விலகி, தனது அதிகாரபூர்வப் பொறுப்புகளை நிறைவு செய்தார்.

நவம்பர் மாதம் முதல், சாங்கி பொது மருத்துவமனை சுகாதார நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகவுள்ளார். இருப்பினும், அதன் இயக்குநர் சபை உறுப்பினராக அவர் தொடர்ந்து நீடிப்பார்.

“என் சுயவிவரக் குறிப்பில் இப்போது ஒரே ஒரு வரிதான் உள்ளது,” என்று முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் நகைச்சுவையாகக் கூறினார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மூன்று பக்க சுயவிவரக் குறிப்பில் 20க்கும் மேற்பட்ட வாரியம் மற்றும் குழுப் பதவிகள் பட்டியலிடப்பட்டிருந்ததற்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

2005ல் அவர் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த தமது வாழ்க்கைத் தொழிலை விட்டு விலகிய 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஓய்வு வருகிறது.

ஆனால், அமைதியான வாழ்க்கைக்குப் பின்வாங்குவதற்குப் பதிலாக, அவர் மீண்டும் மீண்டும் அந்த நெருக்கடியான பொறுப்பை ஏற்க, ஊதியமின்றி அழைக்கப்பட்டார்.

ஏஐசி, சுகாதார அமைச்சுக் குழுமம் ஆகியவற்றில் வகித்த பொறுப்புகளுக்கு மட்டுமே தான் இயக்குநர் ஊதியத்தைப் பெற்றதாக திரு ஈ தெரிவித்தார். அவர் மேற்கொண்ட பிற தன்னார்வப் பணிகள், உதவும் கடமை உணர்வின் அடிப்படையில் அமைந்தவை.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அவற்றில், தேசிய சிறுநீரக அறநிறுவனம் அதன் மிகப்பெரிய நெருக்கடியின்போது வழிநடத்தியது, அமைச்சர்களின் ஊதியங்களை மறுஆய்வு செய்யும் குழுவிற்குத் தலைமை தாங்கியது, பொதுப் போக்குவரத்து மன்றத்தின் தலைவராகச் செயல்பட்டது ஆகியவை அடங்கும். குறிப்பாக, அந்த மன்றத்தின் தலைவராக இருந்தபோது, ​​கட்டண உயர்வு தொடர்பான பொதுமக்களின் விமர்சனங்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

2025ல், அவருக்கு ஆரம்ப நிலையில் இருந்த விந்துநீர் சுரப்பிப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவர் ஐந்து முறை கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டார்.

“அது மிக ஆரம்ப நிலையிலேயே இருந்தது. அதனால் அது அச்சமூட்டுவதாகவோ அல்லது பயங்கரமானதாகவோ இருக்கவில்லை. சரியான நேரத்தில் அதைக் கண்டறிந்து சரிசெய்துவிட்டேன்,” என்று அவர் கூறினார். வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போதுதான் அந்தப் புற்றுநோய் கண்டறியப்பட்டது.

“அந்தப் புற்றுநோய் இப்போது முழுமையாக நீங்கிவிட்டது. அதனால் அதைப் பற்றி நான் இனி நினைப்பதில்லை,” என்றும் அவர் கூறினார்.

திரு ஈக்குத் தன்னார்வப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு மிக இளம் வயதிலேயே கிடைத்தது. சிங்கப்பூரின் ‘அறப்பணிகளின் தந்தை’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், சமூக உண்டியல் அமைப்பை நிறுவியவருமான மறைந்த ஈ பெங் லியாங் மூலமாகவே, சிறுவயதிலேயே திரு ஈக்கு அறப்பணிகள் குறித்த அறிமுகம் கிடைத்தது.

தமது இரண்டாவது ஓய்வுக் காலத்தில், இளையர்களுடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், முதுமை, பிற தலைப்புகள் குறித்த கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளவும் திரு ஈ திட்டமிட்டுள்ளார்.