Jailer 2: ஒன் சன்.. ஒன் மூன்.. பாடல் எப்படி இருக்கு?.. டைகர் கா ஹுகும் அளவுக்கு இருக்கா? இல்லையா?
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்துடன் போட்டியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷ் நடித்த ஓம் திரைப்படம் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் தள்ளிப் போயுள்ளது. நவம்பர் இறுதி அல்லது டிசம்பருக்குச் செல்லும் என்கின்றனர்.
அனிருத் மற்றும் நெல்சனின் வழக்கமான காமெடி ப்ரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு மெகா விருந்து வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள ஒன் சன் ஒன் மூன் பாடல் சர்வதேச தரத்தில் உள்ளதா? இல்லையா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.
இன்டர்நேஷ்னல் லெவல்ல இருக்கணும், அதுவும் நம்ம ஊர் இன்டர்நேஷ்னல், ரஜினிசம் என அனிருத்தை நெல்சன் போட்டு ரொம்பவே குழப்பிவிட்டார் போலத் தெரிகிறது. அனிருத் பாடல் வரிகளே கேட்காத அளவுக்கு ஒரு பாடலை கிண்டிக் கொடுத்துள்ளார்.
உலக டூரில் பிஸி: அனிருத் தொடர்ந்து உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் நிலையில், கிடைக்கிற கேப்பில் தான் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். டிசி படத்துக்கு அவர் போட்ட இசை தரமாக இருந்தது. இந்நிலையில், ஜெயிலர் 2விலும் அந்த மேஜிக்கை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஒன் சன் ஒன் மூன் பாடல் சற்று ஏமாற்றம் தான் என்று தான் சொல்ல வேண்டும்.
ஹுகும் அளவுக்கு இருக்கா?: ஜெயிலர் படத்தின் பாடல்கள் எல்லாமே பிளாஸ்ட் தான். காவாலா, ஹுகும், ரத்தமாறே உள்ளிட்ட பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பெரும் பலமாக இருந்தன. அல்ல போலலே பாடல் ஓகே ரகம் என்று சொன்னால் ஒன் சன் ஒன் மூன் சுமார் ரகம் தான். ஸ்லோ பாய்ஸனாக பாடல் வெற்றி பெறுமா என்பது படத்தில் அது வரும் இடத்தைப் பொறுத்து தான். ஆனால், "டைகர் கா ஹுகும் அலப்பறை கெளப்புறோம்" என சூப்பர் சுப்பு இறங்கி அடித்த வரிகள் எல்லாம் இல்லாமல் "இன்னைக்கும் என்னென்னைக்கும் ஒரு தலைவன் தான், பத்திக்கும் எட்டுத்திக்கும் அவன் பேர் சொன்னால்" இந்த வரிகளை தவிர பாடல் வரிகள் பெரிதாக கவரவில்லை.