📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 02:03 PM

CM Vijay: சென்னை விமான நிலையம்

CM Vijay: சென்னை விமான நிலையம்

CM Vijay: சென்னை விமான நிலையம் - 10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயால் உயிர் பெறும் திட்டம் - காரணம் என்ன?

CM Vijay On Chennai Airport: தரம் குறைவதை சுட்டிக்காட்டி சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முதலமைச்சர் விஜயின் முயற்சி சரியா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

CM Vijay On Chennai Airport: சென்னை விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பணிகளை புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

10 ஆண்டுகால தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்ற முயற்சி என்பது கடந்த 2014ம் ஆண்டிலேயே தொடங்கியது. இதற்கான தீவிர பரிசீலனைகளும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், விமான நிலைய நிர்வாக ஆணையத்தின் ஊழியர்கள், அவர்கள் சார்ந்த சங்கங்களின் போராட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியான கடும் எதிர்ப்புகள் காரணமாக தனியார்மயமாக்கல் முயற்சி 2016ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டது. அதிமுக, திமுக ஆட்சிகளும் தனியார்மயமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதேநேரம், கடந்த 10 ஆண்டுகளில் அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கவுகாத்தி,திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு ஆகிய 6 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் அரசு கூட்டாண்மையும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன.

நிலைப்பாட்டை மாற்றிய முதலமைச்சர் விஜய்:

இந்நிலையில் தான், சென்னை விமான நிலையத்தை இயக்கும் நிறுவனத்தை மாற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, பத்தாண்டு காலமாக இருந்துவந்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் மாற்றியுள்ளார். இதுதொடர்பாக ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கியுள்ள விமான நிலையத்தை விட உயர் தரமான விமான நிலையம் ஒன்று தமிழ்நாட்டின் முதலீட்டு இலக்குகளுக்குத் தேவை. விமான நிலையத்தின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் எதிர்கால மேம்பாட்டுப் பணிகளை ஒரு புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்க விரைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

பின்னடைவில் சென்னை விமான நிலையம்:

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தரவுளின்படி, ஏப்ரல் 2026 நிலவரப்படி பயணிகள் போக்குவரத்தில் சென்னை தேசிய அளவில் ஆறாவது இடத்திற்குச் சரிந்து, கொல்கத்தாவால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முனையத் திறன் ஆண்டுக்கு 2 கோடியே 70 லட்சம் பயணிகளாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன் இது 3 கோடியே 50 லட்சமாக உயரும். ஆனாலும், 2025-26 நிதியாண்டில் இது 2 கோடியே 30 லட்சம் பயணிகளை மட்டுமே கையாண்டுள்ளது. இது கொரோனா பாதிப்புக்கு முந்தைய எண்ணிக்கையான 2 கோடியே 25 லட்சத்தை விட சற்றே அதிகமாகும் எனவும் முதலமைச்சர் விஜயின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

பயணிகளுக்கு தரமற்ற சேவைகள்:

மேலும், முனையத்திற்கு வெளியே வாடகை கார்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தை அணுகுவதில் உள்ள சிரமம், ஒழுங்குபடுத்தப்படாத டாக்சி செயல்பாடுகள், வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாதது, மோசமாகப் பராமரிக்கப்படும் கழிவறைகள் மற்றும் இருக்கைப் பகுதிகள், தொடர்ச்சியான ஏசி செயலிழப்புகள், லக்கேஜ்களை தாமதமாக வழங்குதல் மற்றும் பாதுகாப்பு மற்றும் இமிக்ரேஷன் சோதனைகளில் நீண்ட வரிசைகள் உள்ளிட்ட செயல்பாட்டுக் குறைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சர்வதேச முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான தாமதங்களாலும், விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் கொள்ளளவு திறன் குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: TN DGP: Tasmac: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

சரக்கு போக்குவரத்திலும் சரிவு:

தரவுகளின்படி, சென்னை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியும் பின்தங்கியுள்ளது. மே 2026 காலகட்டத்தில் இங்கு 6 சதவிகித வளர்ச்சி மட்டுமே பதிவான நிலையில், பெங்களூருவில் இது 14.5 சதவிகிதமாக உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 36 விமான இயக்கங்கள் என்ற அறிவிக்கப்பட்ட உச்சபட்ச திறனுக்கு எதிராக, 2026 நிதியாண்டில் இங்கு 1,58,702 இயக்கங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. அதவாது ஒரு நாளைக்குச் சராசரியாக சுமார் 435 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் தோராயமாக 320 உள்நாட்டு இயக்கங்களும் 115 சர்வதேச இயக்கங்களும் அடங்கும்” என்பது போன்ற விவரங்களும் முதலமைச்சர் விஜயின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒருவேளை இதனை ஏற்று மத்திய அரசு சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கினால், பயணிகளுக்கு தரமான சேவை கிடைக்கும் என்பதோடு, அதன் வாயிலான மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் பெருகும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி