📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 09, 2026 09:03 PM

சிங்கப்பூர் எரிசக்தி மீள்திறன்: உயிரி

சிங்கப்பூர் எரிசக்தி மீள்திறன்: உயிரி

மத்திய கிழக்கு, ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், சிங்கப்பூர் பலதரப்பட்ட, மீள்திறன் கொண்ட ஆற்றல் விநியோகத்தைப் பராமரிக்க உயிரி-திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உதவக்கூடும் என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் (ஆற்றல், தொழில்) டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

“2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை முழுமையாகக் குறைக்கும் இலக்கை அடைய செயல்படும் வேளையில், நமது விநியோகம், பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் குறைந்த செலவில் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்,” என்று ‘ஷெல் பவரிங் புரோகிரெஸ் டுகெதர்’ மன்றத்தில் அவர் பேசினார்.

மேலும், கண்டிப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்தன்மை தரநிலைகளைப் பூர்த்தி செய்த உயிரி-திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் முதல் சரக்கை, ஷெல் நிறுவனமும் சிங்கப்பூர் எல்என்ஜி கார்ப்பரே‌‌ஷன் நிறுவனமும் அண்மையில் எஸ்எல்என்ஜியின் ஜூரோங் தீவு முனையத்தில் இறக்கியதாகத் தெரிவித்தன.

அந்த முனையம் மூன்றாவது படகுத்துறையுடன் விரிவாக்கப்பட்டு வருகிறது.

மேலும், சிங்கப்பூரின் தொடக்க நிறுவனங்களுக்கான தேசிய வர்த்தக சங்கமான ‘ஆக்‌‌ஷன் கம்யூனிட்டி ஃபார் என்டர்பிரினியர்ஷிப்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைவ்வயர் சிங்கப்பூர்’ திட்டத்தை அந்த ஆற்றல் முன்னணி நிறுவனம் தொடங்கியது.

செயற்கை நுண்ணறிவு, அறிவார்ந்த உள்கட்டமைப்பு, ஆற்றல் அமைப்புகள் போன்ற துறைகளில் உள்ள “நம்பிக்கையளிக்கும்” சிங்கப்பூர் நிறுவனங்கள், தங்களின் ஆரம்பக்கட்ட வணிக முன்னேற்றத்திலிருந்து நிலையான வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் நோக்கிச் செல்ல திட்டம் உதவும் டான் கூறினார்.

“மூன்றாவது படகுத்துறை, வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு ஆதரவளிக்கும் சிங்கப்பூரின் திறனை வலுப்படுத்தும் என்பதோடு ஒரு முன்னணி உலகளாவிய எல்என்ஜி வர்த்தக மையமாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்தும்,” என்று எஸ்எல்என்ஜி தலைமை நிர்வாக அதிகாரி லியோங் வெய் ஹங் கூறினார்.