ஃபார்முலா 1: சிங்கப்பூரில் ஸ்பிரின்ட் பந்தயம்
சிங்கப்பூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 10) ஸ்பிரின்ட் (Sprint) எனும் குறும்பந்தயம் நடக்கவுள்ளது.
சிங்கப்பூர் இரவு நேர கார் பந்தய வரலாற்றில் முதன்முறையாகக் குறும்பந்தயம் நடக்கிறது.
ஏறத்தாழ 30 நிமிடங்கள் நடக்கும் அந்தப் பந்தயத்தில் முதலிடம் பிடிப்பவருக்கு எட்டுப் புள்ளிகள் கிடைக்கும்.
முதல் எட்டு இடங்களைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும்.
பந்தயத்தில் ‘பிட் ஸ்டாப்’ நிறுத்தம் இருப்பது அரிது என்பதால் கார் ஓட்டுநர்கள் தங்களது முழுத்திறமையையும் காட்ட முயல்வர்.
ஃபார்முலா 1 பந்தயத்தில் ரசிகர்களுக்குப் புதுவித அனுபவம் தர வேண்டும் என்ற வகையில் குறும்பந்தயம் 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
குறும்பந்தயத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது அது ஆண்டுக்கு ஆறு முறை நடக்கிறது.
அடுத்த ஆண்டு முதல் அந்த எண்ணிக்கை 10க்கு உயர்கிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இதுவரை அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், சீனா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் குறும்பந்தயம் நடைபெற்றுள்ளது.