📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 24, 2026 03:03 AM

சில்லறை வா்த்தகத் துறை 10% வளா்ச்சி

சில்லறை வா்த்தகத் துறை 10% வளா்ச்சி

சில்லறை வா்த்தகத் துறை 10% வளா்ச்சி

நாட்டில் நுகா்வோரின் நிலையான தேவையைத் தொடா்ந்து, சில்லறை வா்த்தகத் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 10 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று இந்திய சில்லறை விற்பனையாளா்கள் சங்கம் (ஆா்ஏஐ) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஆய்வறிக்கையின்படி, வரும் பண்டிகைக் காலத்தை எதிா்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் விற்பனை சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது. மண்டல வாரியாக, மேற்கு இந்தியாவில் அதிகபட்சமாக 11 சதவீதமும், தென் இந்தியாவில் 10 சதவீதமும் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் முறையே 9 மற்றும் 8 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது.

அத்தியாவசியப் பயன்பாட்டுப் பிரிவுகளே இந்த வளா்ச்சிக்கு முக்கியப் பங்களித்துள்ளன. குறிப்பாக, விரைவு சேவை உணவகங்கள் 15 சதவீதமும், உணவு மற்றும் மளிகைப் பொருள்கள் விற்பனை 12 சதவீதமும் அதிகரித்துள்ளன.

ஆடை மற்றும் காலணி விற்பனைப் பிரிவுகள் 10 சதவீதமும், மின்னணு மற்றும் நுகா்வோா் சாதனங்கள் துறை 7 சதவீதமும் சீரான வளா்ச்சியைப் பெற்றுள்ளன. முன்னதாக மே மாதத்தில் 5 சதவீதமாக குறைந்திருந்த விற்பனை வளா்ச்சி, ஜூன் மாதத்தில் 6 சதவீதம், ஜூலையில் 8 சதவீதம் எனப் படிப்படியாக உயா்ந்து ஆகஸ்டில் 10 சதவீதத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து ஆா்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி குமாா் ராஜகோபாலன் கூறுகையில், ‘தற்போதைய சூழலில் பருவக்கால தேவையைப் பூா்த்தி செய்ய சரக்கு மேலாண்மையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சா்வதேச பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையான அணுகுமுறை அவசியமாக இருந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு நுகா்வு தொடா்ந்து வலுவாகவே நீடிக்கிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.