📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 17, 2026 07:33 PM

செப்.19ல் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா

செப்.19ல் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா

சென்னை: வரும் செப்டம்பர் 19ம் தேதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் தி.மு.க., சார்பில் கொண்டாடப்படும் முப்பெரும் விழா, கடந்த செப்டம்பர் 15ம் தேதி, சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று (செப் 17) திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 15ம் தேதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது திமுக முப்பெரும் விழா வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வீடியோ!

திமுக முப்பெரும் விழா எப்பொழுது? வெளியான புதிய அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்