சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து!
சென்னை: இண்டி மியூசிக் எனப்படும் சுதேசி பாடல்களை பாடக் கூட தற்போது நெப்போ கிட்ஸ் செம டிரைனிங் எடுத்துக் கொண்டு பக்காவாக இறங்கி விட்டனர் என மீசைய முறுக்கு 2 படத்தில் இடம்பெற்ற வசனம் தான் தற்போது இந்த பஞ்சாயத்தைக் கிளப்பி உள்ளது.
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஹிப்ஹாப் தமிழா ஆதி கானா vs கர்நாடக சங்கீதம் என்கிற கதையை ஆரம்பித்து கடைசியில் நெப்போ கிட் பஞ்சாயத்து வரை மீசைய முறுக்கு 2 படத்தில் பேசியுள்ளார்.
வாரிசு நடிகராக வில்லன் ரோலில் ஒருவரை போட்டு ஆபாச வசனத்துக்கு இணையாக நெப்போ என ஹிப்ஹாப் ஆதி கத்த அதற்கு அந்த நடிகர் வந்து சண்டையே பிடித்து விடுவார். ஆனால், இந்த படத்தை தயாரித்ததே சுந்தர். சி மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் தான் என்று பதிலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு எதிராக சாய் அபயங்கர் ரசிகர்கள் போட்டு பொளந்து வருகின்றனர்.
சாய் அபயங்கர் vs ஆதி: தமிழ் சினிமாவில் இன்றைக்கு டாப் இசையமைப்பாளர்களாக அனிருத் மற்றும் சாய் அபயங்கர் உள்ளனர். அனிருத்தையே ஓவர்டேக் செய்துவிட்டு சாய் அபயங்கர் அல்லு அர்ஜுன் படம் வரை பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 படத்தில் வில்லன் ரோலில் வைக்கப்பட்ட கதாபாத்திரம் மறைமுகமாக சாய் அபயங்கரை அட்டாக் செய்கிறது என நெட்டிசன்கள் பஞ்சாயத்தைக் கிளப்பி உள்ளனர்.
இண்டி மியூசிக்கில் நடிகைகளுடன் ஆட்டம்: பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரினியின் மகன் தான் சாய் அபயங்கர். ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ், அனிருத் உள்ளிட்டோரிடம் கீபோர்ட் கலைஞராக பணியாற்றிய சாய் அபயங்கர் இண்டி மியூசிக் எனப்படும் சுதேசி பாடல்களான கட்சி சேர, ஆசை கூட, சித்திர புத்திரி, விழி வீக்குற, பவழ மல்லி, ரதிமா என டாப் ஹீரோக்களை போல இளம் நடிகைகளுடன் ஆட்டம் போட்டு இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி மிகப்பெரிய இடத்தை பிடித்தது மட்டுமின்றி ஏகப்பட்ட படங்களையும் கைவசம் வைத்துக் கொண்டு டாப் இசையமைப்பாளராகவும் குறுகிய காலத்தில் ஆகிவிட்டார். இதற்கு காரணமே அவர் ஒரு நெப்போ கிட் என்கிற பஞ்சாயத்து தான் தற்போது மீசைய முறுக்கு 2 படத்தில் மறைமுகமாக ஹிப்ஹாப் ஆதி அவரை அட்டாக் செய்ய காரணம் என்கின்றனர்.
நெப்போடிச சர்ச்சை: பாலிவுட் முதல் கோலிவுட் வரை நெப்போடிச பிரச்னைகளும் சர்ச்சைகளும் எல்லா இடங்களிலும் இருந்துக் கொண்டு தான் இருக்கின்றன. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தின் ஹீரோ சந்தீப் கிஷனை விட மீடியா வெளிச்சம் அதிகப்படியாக ஜேசன் சஞ்சய்க்கு இருக்கத்தான் செய்கிறது. இதே சினிமாவில் சுயம்புவாக பல திறமையான கலைஞர்களும் தங்களது திறமைகளை காட்டி சூப்பர் ஸ்டார்களாகவும் மாறியுள்ள வரலாற்றையும் யாரும் மறக்கவே முடியாது. அந்த விஷயத்தை தான் கிளைமேக்ஸில் ஹிப் ஹாப் தமிழா ஆதி காட்டியிருப்பார் என்பதால் இந்த தேவையற்ற விவாதங்கள் எல்லாம் வீண்வேலை தான் என்றும் முன்னேறுகிற வழியை பாருங்கள் என்றும் சண்டை போடுபவர்களுக்கு எதிராக அட்வைஸ்களும் சோஷியல் மீடியாவில் குவிகின்றன.