📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 27, 2026 11:03 AM

ஹர்திக் பாண்டியாவுக்கு விழுந்த அடி.. நியூசிலாந்து தொடரில் இருந்தும் விலகல்.. காரணம் என்ன?

ஹர்திக் பாண்டியாவுக்கு விழுந்த அடி.. நியூசிலாந்து தொடரில் இருந்தும் விலகல்.. காரணம் என்ன?

ஹர்திக் பாண்டியாவுக்கு விழுந்த அடி.. நியூசிலாந்து தொடரில் இருந்தும் விலகல்.. காரணம் என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒரு புதிய காயத்தில் சிக்கியுள்ளார். இதனால் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு காயம் காரணமாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. அவரது காயம் குணமாகி வந்ததால் அவர் அடுத்து நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவருக்கு வலது காலின் கீழ்ப்பகுதியில் திடீரென புதிய காயம் ஏற்பட்டுள்ளது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் குறைந்தது 3 வாரங்களுக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, செப்டம்பர் 20 அன்று அவர் முழு உடற்தகுதி பெற்றுவிடுவார் எனக் கருதப்பட்டது. அதனால் அக்டோபர் 6 அன்று தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு முந்தைய தீவிரப் வலைப் பயிற்சியின் போது மீண்டும் வலி ஏற்பட்டதால், பிசிசிஐ மருத்துவக் குழுத் தலைவர் டாக்டர் தின்ஷா பர்திவாலா 2 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 4 மாதங்களாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்த போதும், அடுத்தடுத்து 3 முறை அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது அவரது மறுவருகைக்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட இருந்த நிலையிலும் காயம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை.

அக்டோபர் 22 அன்று தொடங்கும் நியூசிலாந்து தொடர் கைநழுவிவிட்டதால், இனி சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்த பிறகே ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியும்.