📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 21, 2026 12:00 PM

BIGG BOSS 10 : Comman Man போட்டியாளர் வெளியேற்றம்! விறுவிறுப்பாகும் களம் !

BIGG BOSS 10 : Comman Man போட்டியாளர் வெளியேற்றம்! விறுவிறுப்பாகும் களம் !

BIGG BOSS 10 : Comman Man போட்டியாளர் வெளியேற்றம்! விறுவிறுப்பாகும் களம் !

பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரமே Comman Man போட்டியாளர் வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான BIGG BOSS தமிழ் சீசன் 10 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரண்டாவது வார எலிமினேஷன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது Comman Man போட்டியாளர் மணிவண்ணன்ஆவார். பொதுமக்கள் போட்டியாளராக இந்த சீசனில் கலந்து கொண்ட அவர், குறுகிய காலத்திலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி, மணிவண்ணனின் வெளியேற்றத்தை அறிவித்ததை தொடர்ந்து, அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

Comman Man வெளியேற்றம் :

பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் இணைந்து போட்டியிடும் வாய்ப்பை பெற்ற பொதுமக்கள் போட்டியாளர்களில் ஒருவராக மணிவண்ணன் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் இருந்து, அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட அவர், பல்வேறு டாஸ்க்குகள் மற்றும் குழு செயல்பாடுகளில் பங்கேற்றார்.

பிரபல போட்டியாளர்களுக்கு மத்தியில் தனது தனித்துவமான அணுகுமுறையால் கவனம் பெற்ற மணிவண்ணன், வீட்டில் நிலவும் போட்டி சூழல் மற்றும் சவால்களை எதிர்கொண்டு வந்தார்.

2-வது வாரத்திலேயே வெளியேறிய போட்டியாளர் :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களின் செயல்பாடுகள், நாமினேஷன் மற்றும் ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் எலிமினேஷன் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த வாரம் வெளியேற்ற பட்டியலில் இடம்பெற்ற மணிவண்ணன், குறைந்த வாக்குகளின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரது வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு மேலும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் வாரங்களில் போட்டியின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக போட்டியாளர்களிடம் விடைபெற்ற மணிவண்ணன் :

எலிமினேஷன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மணிவண்ணன் பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களிடம் விடைபெற்றார். தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, போட்டியில் இருந்து வெளியேறினார்.

சீசனின் ஆரம்ப கட்டத்திலேயே அவரது வெளியேற்றம் நிகழ்ந்துள்ளதால், இது பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியின் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இனி பிக் பாஸ் வீட்டில் நடக்கப்போவது என்ன ?

மணிவண்ணன் வெளியேறிய நிலையில், மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள தீவிரமாக போட்டியிட உள்ளனர்.

வரும் நாட்களில் நடைபெற உள்ள புதிய டாஸ்க்குகள், நாமினேஷன் மற்றும் போட்டியாளர்களுக்கிடையேயான உறவு மாற்றங்கள் ஆகியவை நிகழ்ச்சியின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் அடுத்ததாக யார் வெளியேறுவார், யார் ரசிகர்களின் ஆதரவை பெறுவார் என்பதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.