📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 03, 2026 12:01 PM

அழகு தமிழில் ஏஐ நூல்

அழகு தமிழில் ஏஐ நூல்

இன்று மனித குலத்​தின் திசை வழியை மாற்​றும் நவீன தொழில்​நுட்​ப​மான செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) பற்றி அதி​கம் பேசப்​படு​கிறது. இதன் பயன்​பாடு​கள் ஒவ்​வொரு துறை​யிலும் ஆதிக்​கம் செலுத்​தத் தொடங்​கி​யிருப்​ப​தை​யும் காண முடிகிறது.

இத்துறையைப் பற்றி அதி​கம் விவா​திக்​கப்​படும் நிலை​யில், அதைப் பற்​றிய நூல்​களும் தொடர்ச்​சி​யாக வெளி​யாகி வரு​கின்​றன. அந்த வகை​யில் மறைமலை இலக்​கு​வ​னார் எழு​திய ‘செயற்கை நுண்​ணறிவு ஓர் அறி​முகம்’ என்​கிற நூல் கவனம் பெறுகிறது.

இந்த நூலை 5 பகு​தி​களாகப் பிரித்து ஆசிரியர் எழு​தி​யிருக்​கிறார். செயற்கை நுண்​ணறிவு என்​றால் என்ன என்​ப​தில் தொடங்கி அதன் வகைகள், மாடல்​கள், பயன்​பாடு​கள் என ஒவ்​வொன்​றாகப் பிரித்து நன்கு புரி​யும்​படி எழுதப்​பட்​டுள்​ளது.