📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 12, 2026 10:38 AM

"அவர் எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார்?".. திலக் வர்மா குறித்து டி வில்லியர்ஸ் சந்தேகம்

"அவர் எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார்?".. திலக் வர்மா குறித்து டி வில்லியர்ஸ் சந்தேகம்

"அவர் எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார்?".. திலக் வர்மா குறித்து டி வில்லியர்ஸ் சந்தேகம்

மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய பேட்டர் திலக் வர்மாவை எந்த பேட்டிங் வரிசையில் களமிறக்குவது என்பது இந்திய அணி நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ்.

இது பற்றி தனது யூடியூப் சேனலில் பேசிய ஏபி டி வில்லியர்ஸ், "இந்திய அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா மற்றும் பல ஆல்-ரவுண்டர்கள் என பல முன்னணி வீரர்கள் உள்ளனர். இந்த சூழலில் திலக் வர்மாவை எங்கு களமிறக்குவது? அணியின் சமநிலையைத் தீர்மானிப்பதில் திலக் வர்மாவின் தேர்வு மிகவும் சிக்கலானதாக இருக்கும். அவர் எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுவார் என்ற கேள்வி எழுகிறது" என்று கூறினார்.

மேலும், "இந்திய அணி மிகவும் வலிமையாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், ஆப்கானிஸ்தான் போன்ற ஆபத்தான அணிக்கு எதிராக விளையாடும் போது ஒவ்வொரு வீரரின் பங்களிப்பு என்ன என்பதை அணி நிர்வாகம் தெளிவாக வரையறுக்க வேண்டும்" என்று டி வில்லியர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே, இந்திய டி20 அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களில் படுதோல்வி அடைந்த நிலையில் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் நிச்சயமாக வெற்றிகளை பெற வேண்டிய அழுத்தத்தில் உள்ளது. இந்த நிலையில், திலக் வர்மாவை அவருக்கு சாதகமான பேட்டிங் வரிசையில் ஆட வைக்க வேண்டும் என்பதை டி வில்லியர்ஸ் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இதற்கிடையில், டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக இப்போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்று முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (செப்டம்பர் 13) தொடங்கவுள்ள முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று டெல்லி கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால், டெல்லி போக்குவரத்து காவல்துறையினருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு முழுப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், போட்டி ஒத்திவைக்கப்படாமல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டெல்லி கிரிக்கெட் சங்கம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.