’அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஒன்றாக தேர்தலை சந்திப்பார்கள்’
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்றே தெரியாமல் பேசி வருகிறார். தரம் தாழ்ந்து ஒரு தலைவர் மூன்றாம் தர நபர், நான்காம் தர நபர் போன்று பேசி வருகிறார். அதுதான் அவர்களுடைய ஒரிஜினல் முகம். தி.மு.க-வின் அத்தியாயம் இத்துடன் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அ.தி.மு.க தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலைமைதான் தி.மு.க-விற்கும் ஏற்படும். இந்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் டெபாசிட் வாங்குவதே மிகவும் கடினம்.
தற்போது உள்ள அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கட்சியை இன்று முட்டுச்சந்திற்கு கொண்டு போய் நிறுத்திவிட்டார். இந்தத் தேர்தலிலாவது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவரை மாற்றுவார்களா என்று அவரது கட்சியினரே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கும் எந்த ஒரு வெற்றியும் கிடைக்கப் போவதில்லை. அடுத்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போகிறார்கள். மூன்று பேர் சேர்ந்தாலும் டெபாசிட் கிடைக்காது.
நெய்வேலியில் இருந்து ஒன்றியத் தொகுப்புக்கு வரும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது. அதனால் தற்காப்பிற்காக ஜெனரேட்டரைப் பயன்படுத்துமாறு தான் கூறியிருக்கிறோம். தொழில்துறையினருக்கு எந்த ஒரு மின்சாரத் தடையும் நாங்கள் செய்யவில்லை. தற்காப்பு காரணமாகவே ஒரு சில பகுதிகளில் அதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஒரு சாட்டேஜ் காரணமாக கடந்த வாரத்தில் ஓரிரு இடங்களில் ஒரு மணி நேரம், அரை மணி நேரம் மின் நிறுத்தம் இருந்தது. இருந்தபோதிலும், அது பர்ச்சேஸ் செய்து சரி செய்யப்பட்டுவிட்டது” என்றார்.