அரசு அதிகாரிகளுக்கு டேட்டிங் ஆப்; அறிமுகம் செய்தது சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 29,864 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. தாமதமான திருமணங்களே குழந்தை பிறப்பு விகிதம் குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
எனவே, மக்கள் தொகை சரிவை கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு டேட்டிங் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. 'பர்ஸ்ட் டேட்' என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த ஆப், முதற்கட்டமாக அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது. திருமணமாகாத 21 முதல் 35 வயதுடைய ஆண், பெண்கள், இந்த ஆப்பின் மூலம் தங்களது துணையை தேர்வு செய்யலாம்.
மாதத்திற்கு ஒரு பொருத்தமான வரனை சம்பந்தப்பட்டவருக்கு இந்த ஆப் பரிந்துரைக்கும். இருவரும் முடிவெடுக்க 72 மணிநேர அவகாசம் வழங்கப்படும். இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் மட்டுமே தொடர்பு எண்கள் பகிரப்படும். சுயவிவரங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமே தெரியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரே துறையில் பணிபுரியும் சக ஊழியர்கள் ஜோடிகளாக இணைக்கப்பட மாட்டார்கள்.