📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 21, 2026 04:03 PM

அண்ணாமலைக்கு எச்சரிக்கை! விஜயைக் கிண்டல் செய்யாதீங்க

அண்ணாமலைக்கு எச்சரிக்கை! விஜயைக் கிண்டல் செய்யாதீங்க

அண்ணாமலைக்கு எச்சரிக்கை! "விஜயைக் கிண்டல் செய்யாதீங்க" - அமைச்சர் மரியவில்சன்

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்து அண்ணாமலை விமர்சித்த நிலையில் அமைச்சர் மரியவில்சன் பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தை அண்ணாமலை கிண்டல் செய்வது சரியில்லை என்று நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் கூறியுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி. எண்ணூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்துநிலையத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன், நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து அடிப்படை வசதிகளை எல்லாம் பார்வையிட்ட அமைச்சர்கள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பேருந்தில் ஏறி பயணமும் மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மரியவில்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

இந்த பேருந்து நிலையம் 16 ஆயிரம் சதுர அடியில், 2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இருந்த எம்எல்ஏ நிதியில் இருந்துதான் இது கட்டப்பட்டுள்ளது. எனவே அவருக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முறைப்படி அழைப்பு கொடுத்தோம், எதிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பெயர் எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்கள் தலைவரும் எங்களுக்கு அப்படி சொல்லிக்கொடுக்கவில்லை. அந்த அடிப்படையில் மேயர், எம்பி, கவுன்சிலர், முன்னாள் எம் எல்ஏ ஆகியோருக்கு அழைப்பு கொடுத்தோம். வந்து இருந்தால் நல்லது. அவர்களும் மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள்பேருந்துகளை அதிகமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. பல கோரிக்கைகளை போக்குவரத்துறை அமைச்சரிடம் கொடுத்துள்ளேன். அவரும் செய்துகொடுப்பதாக கூறியுள்ளார்.

கிண்டல் செய்வது நல்லது இல்லை

லண்டன் பயணம் குறித்து அண்ணாமலை விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, அவரை பக்குவமடைந்த அரசியல்வாதியாக நினைக்கிறேன். அவர் பாஜகவில் பல ஆண்டுகள் இருந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அப்படிப்பட்டவரின் கூற்று நல்லது இல்லை ஒரு ரூபாய் என்றாலும் முதலீடுதான். அந்த ஒரு ரூபாயை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும். எங்கு இருந்து முதலீடு வந்தாலும் அதை கொண்டுவரும் முதல்வரை கிண்டல் கேலி செய்வது நல்லது இல்லை.

வருவாய் அதிகரித்து கடன் குறைந்துள்ளது

தவெக ஆட்சிக்கு வந்து குறுகிய நாட்களிலேயே அதிக கடன் பெற்றது குறித்த கேள்விக்கு, அப்படி இல்லை. தூய்மையான ஆட்சியை தமிழக மக்கள் கொண்டுவந்ததால்தான் இன்று வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2025 யில் ரூ.96,567 கோடியாக இருந்த வரி வருவாய், 2026 ஆகஸ்டில் ரூ.1,09,104 கோடியாக அதிகரித்துள்ளது. சுமார் 12 சதவிதம் அதிகமாகி உள்ளது. மேலும், ஆகஸ்ட் 2025ல் ரூ.1,8,460 கோடியாக இருந்த ஒட்டுமொத்த வரி வருவாய் ஆகஸ்ட் 2026ல் ரூ.1,17,790 கோடி ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த வரிவருவாய் சுமார் 8.06 சதவீதம் அதிகரித்துள்ளது ஊழல் இல்லாமல் வரி வருவாயை வெற்றிகரமாக முதல்வர் கொண்டு வந்துள்ளார். 100 சதவீத வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம். கடன் குறைந்துகொண்டு இருக்கிறது முதல் சில மதங்களிலேயே இந்த கடன் குறைந்துள்ளது என்றால் அடுத்த காலண்டை பாருங்கள் இன்னும் குறையும். ஊழல் இல்லாததால் வரி வருவாய் கூடியுள்ளது.

கடன் குறைந்து வருகிறது. வட்டி கட்ட வேண்டும், நிறைய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். எனவே செலவு இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கேற்ப வருவாயை அதிகரிப்போம். இந்த காலாண்டியில் நாங்கள் வாங்கிய கடன், கடந்த ஆண்டியில் அவர்கள் வாங்கிய கடன் விவரங்களை அடுத்தமுறை செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கிறேன். கடன் 19 சதவிதம் குறைந்துள்ளது. ரூ.30,021 கோடி கடனில் கடந்த 2025 ஆகஸ்டோடு ஒப்பிடும் போது 2026 ஆகஸ்டில் 19 சதவிதம் குறைந்துள்ளது. வரி வருவாய் அதிகரித்துள்ளது. கடன் குறைந்துள்ளது. இன்னும் குறையும்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி