📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 03, 2026 03:01 PM

Anbil Avan Blue Sattai Maran Review

Anbil Avan Blue Sattai Maran Review

சென்னை: கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் அன்பில் அவன். நேற்று இப்படமானது திரையரங்குகளில் ரிலீஸாகி; ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது திரை விமர்சனத்தை யூடியூப் சேனலில் ஷேர் செய்திருக்கிறார்.

அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்தவர். தன்னுடைய படங்களில் முழு உழைப்பையும் போடும் அவர்; இப்போது அன்பில் அவன் படத்தில் நடித்திருக்கிறார். இதனை ஆர்.கார்த்திகேயன் என்பவர் இயக்கியிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். நேற்று தியேட்டர்களில் வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது திரை விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஹீரோவும், ஹீரோயினும் ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்ப்பார்கள். பிறகு சொந்தமாக தொழில் ஆரம்பிப்பார்கள். அதனையொட்டி மலை பிரதேசத்துக்கு சென்று ஒரு வீட்டை வாங்குகிறார்கள். அதை வைத்து குடைச்சல் வருகிறது. ஒருகட்டத்துக்கு மேல் ஹீரோ திருப்பி அடிக்கிறார். அதற்கு பிறகு என்ன ஆனது என்பது கதை. இதே மாதிரி ஒரு கதை ஃபகத் பாசில் நடித்து மலையாளத்தில் வந்திருந்தது.

செத்துப்போன கதை: இவர்கள் ஒரு ஆங்கில படத்திலிருந்து ஒரு கதையை எடுத்திருக்கிறார்கள். அந்தக் கதையும் ஏற்கனவே ஒரு நாவலிலிருந்து வந்த கதையை தழுவி எடுத்திருக்கிறார்கள். அதை எங்கிருந்து எடுத்தார்கள் என்று தேடி செல்ல விரும்பவில்லை. நாம் அடிக்கடி சொல்வதுதான், 'வந்த கதையை எடுக்கலாம். வந்து நொந்த கதையை எடுக்கக்கூடாது'. இவர்கள் செத்துப்போன கதையை எடுத்திருக்கிறார்கள்.

இப்படியும் ஒரு சீனா?: நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்காக செய்ய வேண்டும் என்பது மாதிரி,மலையாளத்தில் ரீமேக் உரிமம் வாங்காமலேயே எடுத்திருப்பார்கள். அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். ஹீரோ எப்போது திருப்பி அடிப்பார் என்று நமக்கே ஆவல் அதிகரிக்கும். இவர்கள் என்னவென்றால், எம்.எல்.ஏ, அரசியல்வாதி ஒரு கதையை எடுத்திருக்கிறார்கள். அந்த எம்.எல்.ஏவோ இந்தக் காலத்தில் வந்து ஒரு புலியை தொங்கவிட்டு தோலை உரித்துக்கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் சீனை வைத்து படம் எடுக்கிறார்கள்.

மிஸ் செய்துவிட்டார்கள்: ஹீரோவை தொடர்ந்து டென்ஷன் படுத்துவார்கள். அவன் பொறுத்து பொறுத்து போவான். ஒருகட்டத்தில் திருப்பி அடிக்க புறப்படுவதுதான் இந்தப் படத்தின் கதையே. இவர் திருப்பி அடிக்கும்போது நமக்கோ இதானய்யா உங்கள் டக்கு என்று தோன்றியது. ஓரளவுக்கு காப்பாற்றக்கூடிய படத்தைகூட இவர்கள் மிஸ் செய்துவிட்டார்கள்" என்றிருக்கிறார்.