Sports
October 01, 2026 01:04 PM
ஆசிய விளையாட்டுப்போட்டி அப்டேட்; இன்றும் மட்டும் இந்தியா வென்ற பதக்கம் 3
டோக்கியோ: ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று (அக்டோபர் 01) மட்டும் இந்தியா 3 பதக்கங்களை வென்று பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளது.
ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இன்று (அக்டோபர் 01) இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி, வெண்கலம் வென்றுள்ளது. அரையிறுதியில் ஹாங்காங்கிடம் தோல்வியடைந்த இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி, வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஸ்கிப் படகு போட்டியில் இந்தியாவின் மனு பிரான்சிஸ் மற்றும் குரிசின்கல் நோபல் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்; வில்வித்தையில் தமிழக வீரர் கணேஷ் மணிரத்னம், வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதுவரை 63 பதக்கங்களை இந்திய அணியினர் வென்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Sports