📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 01, 2026 11:03 AM

148 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் உலகிலேயே முதல் அணியாக இந்தியா செய்த சாதனை.. 30 ஓவருக்குள் 300

148 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் உலகிலேயே முதல் அணியாக இந்தியா செய்த சாதனை.. 30 ஓவருக்குள் 300

148 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் உலகிலேயே முதல் அணியாக இந்தியா செய்த சாதனை.. 30 ஓவருக்குள் 300

குவஹாத்தி: இந்திய அணி ஒருநாள் போட்டி வரலாற்றில் உலகிலேயே எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் முதல் 30 ஓவர்களில் எந்த அணியும் எட்டாத ஒரு ஸ்கோரை எடுத்து உலக சாதனை படைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 405 ரன்கள் குவித்தது. 406 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (101) மற்றும் கேப்டன் சுப்மன் கில் (223*) ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். விராட் கோலி 29 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 31* ரன்களும் சேர்க்க, இந்தியா 43.3 ஓவர்களிலேயே 406 ரன்கள் எடுத்து இமாலய வெற்றி பெற்றது.

இந்த அதிரடி சேஸிங்கின் போது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே 30 ஓவர்களுக்குள் 300 ரன்களை கடந்த உலகின் முதல் அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்ட இந்திய தொடக்க ஜோடியான சுப்மன் கில் - ரோஹித் சர்மா, முதல் 10 ஓவர்களில் 92 ரன்களை குவித்தனர். வெறும் 21.1 ஓவர்களிலேயே இந்தியா 200 ரன்களை எட்டி, ஒருநாள் போட்டிகளில் தனது அதிவேக 200 ரன்கள் சாதனையை பதிவு செய்தது.

தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பந்தாடிய இந்தியா, வெறும் 29.1 ஓவர்களிலேயே (175 பந்துகளில்) 300 ரன்களை தொட்டு கிரிக்கெட் உலகை மிரள வைத்தது. இதற்கு முன்பு 2006 இல் ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 32.2 ஓவர்களில் 300 ரன்களை எட்டியதே அதிவேக உலக சாதனையாக இருந்தது. இங்கிலாந்து 33.1 ஓவர்களிலும், இந்தியா 2009 இல் இலங்கைக்கு எதிராக 34.1 ஓவர்களிலும் 300 ரன்களை கடந்திருந்தன. அந்த அனைத்து முந்தைய சாதனைகளையும் சுக்குநூறாக உடைத்து, 30 ஓவர்களுக்கு முன்பாகவே 300 ரன்களை எட்டிய முதல் அணி என்ற புதிய சகாப்தத்தை இந்தியா உருவாக்கியுள்ளது.