📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 03, 2026 01:03 PM

ஆசிய விளையாட்டு: வில்வித்தை ரிகர்வ் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை கும்கும் மோஹோத்

ஆசிய விளையாட்டு: வில்வித்தை ரிகர்வ் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை கும்கும் மோஹோத்

ஆசிய விளையாட்டு: வில்வித்தை ரிகர்வ் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை கும்கும் மோஹோத்

டோக்கியோ: ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்திட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் வில்வித்தை ரிகர்வ் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை கும்கும் மோஹோத் தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் தென் கொரிய வீராங்கனை ஓ யெஜினை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தினார் கும்கும். 17 வயதே ஆன இந்திய வில்வித்தை வீராங்கனை கும்கும் மோஹோத் ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்தார்.

ஆசிய விளையாட்டு வில்வித்தை தனிநபர் ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 17வது தங்கத்தை வென்றது. ஆசிய விளையாட்டில் நேற்று ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தினார். 16 தங்கம் உள்பட 76 பதக்கங்களுடன் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. நேற்று இந்தியா குத்துச் சண்டையில் 3 தங்கம், ஹாக்கி, மல்யுத்தம், வில்வித்தையில் தலா 1 தங்கம் வென்றது.