📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 25, 2026 12:04 AM

ஆசிய விளையாட்டு; 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு; 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி

அய்ச்சி-நகோயா: ஆசிய விளையாட்டில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றுள்ளது. இதன்மூலம் ஒரு தங்கம், 07 வெள்ளி, 09 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

ஜப்பானின் அய்ச்சி- நகோயாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் தடகளப் பிரிவில், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பஹ்ரைன் 3:12.87 நிமிடங்களில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் மனு, பூவம்மா ராஜூ, விஷால், தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் ஆகியோர் கொண்ட அணி 3:14.46 நிமிடங்களில் இலக்கை எட்டி, வெள்ளி வென்றது.

வெண்கலம் வென்ற வியட்நாம் அணியை (3:14.54) விட வெறும் 8 வினாடிகளில் இலக்கை எட்டி, இந்தியா இந்தப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி பின்தங்கிய நிலையில், தமிழக வீராங்கனை வித்யா, தன்னுடைய சிறப்பான செயல்பட்டால், இந்தியாவுக்கு பதக்கம் தேடிக் கொடுத்துள்ளார். முன்னதாக, மகளிர் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சீமா வெண்கலம் வென்றிருந்தார்

2018ல் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கமும், 2023ல் ஹாங்சோவில் நடந்த போட்யில் இந்தியா வெள்ளியும் வென்றிருந்தது. நடப்பு ஆசிய விளையாட்டில் ஒரு தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.