📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 13, 2026 06:31 PM

8 ஆவது ஊதிய குழு : பென்ஷன் வாங்குவோர் வைத்த முக்கிய கோரிக்கைகள்

8 ஆவது ஊதிய குழு : பென்ஷன் வாங்குவோர் வைத்த முக்கிய கோரிக்கைகள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8 ஆவது ஊதிய குழு குறித்தான பேச்சுக்கள் பெருமளவில் இருந்து வருகின்றது. இதுகுறித்து ஓய்வூதியதாரர்கள் சில முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து இருக்கின்றனர். அந்த கோரிக்கைகள் என்ன என்பதை தற்போது விரிவாக பார்த்து தெரிந்துகொள்வோம்குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வுகடைசியாக வாங்கிய பத்து மாத சம்பளத்தில் குறைந்தபட்சம் 67 % தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கின்றதுவயதிற்கு ஏற்ப உயர்வுவயது அதிகரிக்க அதிகரிக்க மருத்துவ செலவுகளும் அதிகரித்து வருவதால் வயதிற்கு ஏற்ப ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். 65 வயது முதல் படிப்படியாக ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்Commutation காலம் குறைப்புஓய்வு பெறும்போது ஒட்டுமொத்தமாக பணத்தை பெற்றுவிட்டால் மீண்டும் முழு ஓய்வூதியத்தை பெறுவதற்கு தற்போது 15 ஆண்டுகள் வரை காலம் எடுக்கின்றது. இந்த வருட வரம்பை 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகின்றதுFitment factorஜனவரி 1 2026 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் fitment factor ஐ சீரமைக்க வேண்டும்அகவிலைப்படி நிவாரணம்பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்விற்கு ஏற்ப அகவிலைப்படி நிவாரணத்தை சரியாக சீரமைத்து ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும்Gratuity -குடும்ப ஓய்வூதியம்ஓய்வு பெறும்போது கிடைக்கும் Gratuity யின் அதிகபட்ச வரம்பை உயர்த்த வேண்டும். ஓய்வூதாரர்கள் இறந்தால் குடும்பத்தை சேர்த்தவர்கள் சிரமப்படாமல் இருக்கும்படி விதிகளை தளர்த்த வேண்டும்ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கும் உரிமைஓய்வூதாரர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப பழைய ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை வழங்க வேண்டும்இந்த ஏழு முக்கியமான கோரிக்கைகளை ஓய்வூதியதாரர்கள் முன் வைத்து இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதாரர்கள் 8 ஆவது ஊதிய குழுவை தான் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர். அதைப்பற்றிய பேச்சு தான் பரவலாக போய்க்கொண்டு இருக்கின்றது. எங்கும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட வண்ணம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது