📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 20, 2026 01:03 PM

49 பந்தில் சதம்.. ஷபாலி வர்மா உலக சாதனை.. ஆசிய விளையாட்டில் வங்கதேசத்தை நொறுக்கிய இந்தியா

49 பந்தில் சதம்.. ஷபாலி வர்மா உலக சாதனை.. ஆசிய விளையாட்டில் வங்கதேசத்தை நொறுக்கிய இந்தியா

49 பந்தில் சதம்.. ஷபாலி வர்மா உலக சாதனை.. ஆசிய விளையாட்டில் வங்கதேசத்தை நொறுக்கிய இந்தியா

நிஷின்: ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில், இந்திய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 49 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை விளாசி அசத்தினார்.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் வரலாற்றிலேயே சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஷபாலி வர்மா படைத்துள்ளார். போட்டியின் 20-வது ஓவரின் கடைசிப் பந்தில் சிங்கிள் தட்டி அவர் தனது சதத்தை நிறைவு செய்தார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர் மழை பொழிந்த இவரது இன்னிங்ஸில் 9 இமாலய சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த ஹர்மன்பிரீத் கவுரின் சாதனையை (49 பந்துகள்) இதன் மூலம் ஷபாலி சமன் செய்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை ஷபாலி தன் வசப்படுத்தியுள்ளார். ஒரே காலண்டர் வருடத்தில் மகளிர் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசிய வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தினார். நடப்பு 2026-ம் ஆண்டில் மட்டும் அவர் 35 சிக்சர்களை பறக்கவிட்டு, சமாரி அத்தபத்துவின் (32 சிக்சர்கள்) சாதனையைத் தகர்த்துள்ளார். மேலும், 2026-ல் 815 ரன்களைக் குவித்து, ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா 37 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 40 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி அடுத்து பேட்டிங் செய்தது. அப்போது விரைவாக விக்கெட்களை இழந்து தவித்தது. 9.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது வங்கதேசம்.

மற்றொரு அரையிறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி பெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அரையிறுதியில் இந்தியா வென்றால் இலங்கையுடன் இறுதிப் போட்டியில் மோதும்.