📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 18, 2026 08:03 AM

வடகிழக்கு பருவமழை: சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைப்பு

வடகிழக்கு பருவமழை: சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைப்பு

வடகிழக்கு பருவமழை: சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைப்பு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளவும், அவசரக்காலங்களில் பொதுமக்களை பாதுகாக்கவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Published : October 18, 2026 at 7:06 AM IST

சென்னை: தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஒரு மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறையின் கோரிக்கையை ஏற்று, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் அமைந்துள்ள 04-வது தேசிய பேரிடர் மீட்புப் படை பட்டாலியனில் இருந்து இந்த மீட்புக் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காலங்களில் சென்னையில் கனமழை பெய்யும்போது, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு, பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நான்காவது தேசிய பேரிடர் மீட்புப் படை பட்டாலியனின் மூத்த கமாண்டன்ட் ஸ்ரீ அகிலேஷ் குமாரின் உத்தரவின் பேரில், இந்த மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவசரகால மீட்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.

பருவமழையின் போது ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு மற்றும் பிற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தால், அங்கு வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவது மற்றும் அவசர கால மீட்புப் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுவர்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்காகப் பேரிடர் மேலாண்மைத் துறையினருடன் இணைந்து மீட்புப் படையினர் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது, எதிர்பாராத வெள்ளப் பாதிப்புகளை விரைவாக எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளவும், அவசரக்காலங்களில் பொதுமக்களைப் பாதுகாக்கவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.