📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News October 09, 2026 12:03 PM

விமானி ஸ்மித் மச்சாரை பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

விமானி ஸ்மித் மச்சாரை பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

விமானி ஸ்மித் மச்சாரை பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

வாஷிங்டன்: துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற பயணிகள் விமானத்தை அதன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கடத்த முயன்றார். அதை, இந்திய விமானி ஸ்மித் மச்சார் வீரத்துடன் தடுத்து பயணிகள் உதவியுடன் துணை விமானியை மடக்கி பிடித்தார். தாக்குதலில் படுகாயமடைந்த ஸ்மித் மச்சார், தற்போது அபுதாபியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஸ்மித் மச்சாரை பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை, பிரதிநிதிகள் சபையில் ஜோஷ் காட்ஹைமர், டான் பேகன், மைக்கேல் மெக்கால் ஆகிய எம்.பி.க்கள் கொண்டு வந்தனர். விமான பயணிகளின் உயிரை காக்க ஸ்மித் மச்சார் காட்டிய அசாதாரண தைரியத்துக்கு இந்த தீர்மானம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகள் கண்டித்ததோடு, முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.