📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 02, 2026 01:04 AM

உடம்பை காட்டி சம்பாதிக்கிறவளுக்கு என்னடி மானம்?.. கேரவனுக்குள் எல்லை மீறிய தயாரிப்பாளர்!

உடம்பை காட்டி சம்பாதிக்கிறவளுக்கு என்னடி மானம்?.. கேரவனுக்குள் எல்லை மீறிய தயாரிப்பாளர்!

சென்னை: சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில்தான் அந்த மூன்று எழுத்து நடிகை திரையுலகிற்குள் வந்திருக்கிறார். ஆனால் காலம் அவரை ஹீரோயினாக ஜொலிக்க வைக்காமல், கவர்ச்சி நடிகையாக மாற்றியிருக்கிறது. அழகும் திறமையும் இருந்தபோதிலும் முன்னணி கதாநாயகியாக அவரால் பெரிய அளவில் வளர முடியவில்லை. அதே நேரத்தில், கவர்ச்சி கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கியிருக்கிறார். கவர்ச்சி நடிகை என்ற அடையாளம் காரணமாக பல இடங்களில் அவமானங்களையும் அசிங்கங்களையும் சந்தித்திருக்கிறார். இருந்தாலும், என்றாவது ஒருநாள் தனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது பயணத்தை அவர் தொடர்ந்து வந்திருக்கிறார்.

வறுமையின் காரணமாகவே சினிமாவுக்குள் வந்த அவருக்கு ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகள் கவர்ச்சி கதாபாத்திரங்களாகத்தான் இருந்திருக்கின்றன. குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவர்ச்சி நடிகையாக நடிக்க தொடங்கிய அவரது பயணம் பல ஆண்டுகள் தொடர்ந்து இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அவருக்கு நேர்ந்த பல சம்பவங்கள் தற்போது அவரது வாழ்க்கையையே படமாக எடுக்கும் அளவுக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது.

கவர்ச்சி நடிகை: அப்படி அவர் பகிர்ந்திருக்கும் சம்பவங்களில் ஒன்றுதான் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கேரவனில் நடந்ததாக கூறப்படும் அதிர்ச்சியான நிகழ்வு. ஒரு முன்னணி நட்சத்திர நடிகரின் திரைப்படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் அவர் நடித்து கொண்டிருந்தபோது, அந்த படத்தின் தயாரிப்பாளர் கேரவனுக்குள் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக நடிகை கூறியிருக்கிறார். அப்போது, நான் கவர்ச்சி நடிகையாக நடிக்கிறேன் என்பதற்காக எதற்கும் சம்மதிப்பவள் கிடையாது. சினிமாவில் வேண்டுமானால் கவர்ச்சியாக நடிக்கலாம். அதற்காக வேறு விதமான விஷயங்களுக்கு நான் தயாராக இல்லை என்று நடிகை திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

கேரவனில் நடந்த சம்பவம்: ஆனால், அதற்கு அந்த தயாரிப்பாளர், உடம்பை காட்டி சம்பாதிப்பவர்களுக்கு என்ன மானம், மரியாதை? உன்னுடைய உடம்பை இந்த மொத்த உலகமும் பார்த்து ரசிக்கிறது. நான் மட்டும் ரசித்தால் என்ன தவறு? இதற்காக வேண்டுமானாலும் தனியாக உனக்கு பணம் கொடுக்கிறேன். இந்த படத்தில் உன்னை நடிக்க வைப்பதற்கு அதுவும் ஒரு காரணம்தான். அதற்காகத்தான் உனக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கிறேன். இந்த படத்தில் உனக்கு நல்ல கதாபாத்திரமும் கொடுத்திருக்கிறேன். படம் வெளியானால் உனக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரும் என்றார்.

மிரட்டிய தயாரிப்பாளர்: அதுமட்டுமின்றி, இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் இந்த படத்திலிருந்து உன்னை தூக்கிவிடுவேன். இதுவரை உனக்காக செலவு செய்த பணம் வீணாக போனாலும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர் மிரட்டியதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, நான் கவர்ச்சி நடிகைதான். அதற்காக இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மேல் உங்கள் படத்தில் நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று கூறிவிட்டு கேரவனை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

படவாய்ப்பே இல்லை: இந்த சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலருக்கும் தெரியவந்ததாகவும், இதனால் அந்த தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அவமானமாகிவிட்டது. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர், இந்த விஷயம் வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த நடிகைக்கு இனிமேல் எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று மற்ற தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பல ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் அந்த நடிகை தவித்ததாகவும், பின்னர் சீரியல் பக்கம் வந்து சில கதாபாத்திரங்களில் நடித்தேன். ஆனால் சினிமாவில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை மறந்துவிடாமல், தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையே ஒரு திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் தற்போது அவர் இறங்கியிருக்கிறார்.

பாவம் அந்த நடிகை: அந்த திரைப்படம் வெளியானால் தனது பெயரும், தனக்கு நடந்த சம்பவங்களும் வெளியில் வந்து பெரிய பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கருதும் சிலர், அந்த படத்தை வெளியிடுவதற்கு பல்வேறு வகையில் தடைகளை ஏற்படுத்த முயற்சி வருவதாக கூறப்படுகிறது. தன்னை பற்றி அந்த திரைப்படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது வெளியில் வந்துவிட கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட பெரிய தயாரிப்பாளர் தரப்பு படத்தின் வெளியீட்டுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பதாகவும் நடிகை தரப்பில் கூறப்படுகிறது. இன்றைக்கு சொந்தம், பந்தம் என்று யாருடைய ஆதரவும் இல்லாமல் தனிமையில் வாழ்க்கையை எதிர்கொண்டு வருவதாகவும், பல கஷ்டங்களை அனுபவித்தாலும் தனது தன்னம்பிக்கையை மட்டும் அந்த நடிகை இழக்கவில்லை.