மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்.4,5,6ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு!
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்.4,5,6ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு!
செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்.4,5,6ல் மதுபானக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; செங்கல்பட்டு மாவட்டம், 35 மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 06.10.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு 04.10.2026 காலை 10 மணி முதல் 06.10.2026 (வாக்குப்பதிவு நாள்) நள்ளிரவு 12 மணி. வரை மற்றும் 09.10.2026 ( வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று முழுவதும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.