📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 13, 2026 05:31 PM

TIFF திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி'!

TIFF திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி'!

கார்த்திக சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது திரைப்படம் ‘டோரதி’. இத்திரைப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தம்மம் ஃபிலிம்ஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் படத்தை தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படம் நேற்று (செப்.11) டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சென்டர்பீஸ் பிரிவில் திரையிடப்பட்டு, வாழ்த்துகளைப் பெற்றுள்ளது.

இதன் மூலம், சமகாலத் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் படைப்பு சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

பொதுவாக 'சென்டர் பீஸ்' என்பது விழா இடைப்பகுதியில் திரையிடப்படும் மிக முக்கியமான மற்றும் கௌரவமிக்க திரைப்படத்தைக் குறிக்கும், அந்த வகையில் டோரத்தி திரைப்படம் அந்த சிறப்பை பெற்றுள்ளது.

டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற வெளியீட்டில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயினும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இது குறித்து இயக்குநர் கூறியதாவது;

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படுவது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் சொல்ல விரும்பிய கதையின் உண்மைத்தன்மையை அப்படியே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை இது கொடுத்துள்ளது.

மேலும், இளையராஜா சாரின் இசை இந்தப் பயணத்துக்குத் துணையாக இருப்பது இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

டோரதி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இளையராஜா இசையமைக்கும் 1,540வது படமாகும்.

ஏற்கனவே படத்தின் ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் செப்.25ம் தேதி வெளியாக உள்ளது.