📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 21, 2026 03:04 PM

டிஃபனி டியோ: ஆசிய விளையாட்டுகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி

டிஃபனி டியோ: ஆசிய விளையாட்டுகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி

நகோயா: இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் எம்எம்ஏ தற்காப்புக் கலை வீராங்கனை டிஃபனி டியோ இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

முதன்முறையாக ஆசிய விளையாட்டுகளில் போட்டியிடும் 36 வயது டியோ, திங்கட்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் வெற்றிபெற்றார். ஜப்பானின் நகோயா நகரில் உள்ள நகோயா சிட்டி இனே விளையாட்டு நிலையத்தில் டியோ, 60 கிலோகிராம் எடைப் பிரிவில் இந்தியாவின் சுச்சிக்கா தரியாலை வென்றார்.

சுச்சிக்கா தரியால், வெண்கலப் பதக்கத்தை வென்றார். அது, ஆசிய விளையாட்டுகள் வரலாற்றில் எம்எம்ஏ போட்டிகளில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சுற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) நடைபெறவுள்ளது. அதில் டியோ, உஸ்பெக்கிஸ்தானின் கிலோலா சொபிரோவாவைச் சந்திக்கவுள்ளார்.

பெண்கள் ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

ஆசிய விளையாட்டுகளின் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தோனீசியாவை 17-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

இந்தியாவின் நவ்னீத் கோர், ருத்துஜா பிசால், தீபிகா செஞ்சாவாத் மூவரும் இந்த ‘பூல் பி’ ஆட்டத்தில் ஆளுக்கு மூன்று கோல்களைப் போட்டு அசத்தினர்.