📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 10, 2026 03:33 AM

துலீப் டிராபி: தென் மண்டலம் 336 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

துலீப் டிராபி: தென் மண்டலம் 336 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

சென்னை: துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்டியில் கிழக்கு மண்​டலம் - தென் மண்​டலம் அணி​கள் விளையாடி வரு​கின்​றன. சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் கிழக்கு மண்​டலம் அணி 708 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் இஷான் கிஷன் 270 ரன்​களும், குமார் குஷாக்ரா 101 ரன்​களும் விளாசினர்.

இதையடுத்து விளை​யாடிய தென் மண்​டலம் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 80 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 242 ரன்​கள் எடுத்​தது. கேப்​டன் திலக் வர்மா 56, ஷாமா மிலிந்த் 2 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 4-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தென் மண்​டலம் அணி 107.3 ஓவர்​களில் 336 ரன்​களுக்கு ஆட்​ட​மி​ழந்து பாலோ-ஆன் ஆனது.

ஷாமா மிலிந்த் 43, திரிபுரண விஜய் 1, முகமது சிராஜ் 1 ரன்​களில் நடையை கட்​டினர். சதம் அடிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்ட திலக் வர்மா 211 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 99 ரன்​கள் எடுத்த நிலை​யில் முகமது கவுனைன் குரேஷி பந்​தில் ஆட்​ட​மி​ழந்​தார். கிழக்கு மண்​டலம் அணி தரப்​பில் முகேஷ் குமார் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

முகமது ஷமி, முகமது கவுனைன் குரேஷி, ஷிகார் மோகன் ஆகி​யோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 372 ரன்​கள் முன்​னிலை பெற்ற கிழக்கு மண்​டலம் அணி, தென் மண்டல அணிக்கு பாலோ-ஆன் கொடுக்​காமல் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடத் தொடங்​கியது. 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் கிழக்கு மண்​டலம் அணி 51 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்​தது.

வைபவ் சூர்​ய​வன்ஷி 8 ரன்​களில் ஆட்​ட​மி​ழந்து ஏமாற்​றம் அளித்​தார். மற்​றொரு தொடக்க வீர​ரான அபிமன்யூ ஈஸ்​வரன் 3 ரன்​னில் நடையை கட்​டி​னார். அதிரடி​யாக விளை​யாடிய இஷான் கிஷன் 98 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​களும், ஷிகார் மோகன் 85 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும் விளாசிய நிலை​யில் ஆட்​ட​மி​ழந்​தனர். சுதீப் குமார் கராமி 2 ரன்​களில் நடையை கட்​டி​னார். குமார் குஷாக்ரா 34, முகமது கவுனைன் குரேஷி 26 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

கைவசம் 5 விக்​கெட்​கள் இருக்க 584 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள கிழக்கு மண்​டலம் அணி இன்று கடைசி நாள் ஆட்​டத்தை எதிர்​கொள்​கிறது. இந்த போட்டி டிரா ஆகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​றதன் மூலம் கிழக்கு மண்​டலம் அணி சாம்​பியன் பட்​டம் வெல்​லும்​.