📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 10, 2026 04:33 AM

ஒரே நாளில் 2 நாடுகளில் போட்டி: இந்திய கிரிக்கெட் அணி மேஜிக்

ஒரே நாளில் 2 நாடுகளில் போட்டி: இந்திய கிரிக்கெட் அணி மேஜிக்

ஒரே நாளில் 2 நாடுகளில் போட்டி: இந்திய கிரிக்கெட் அணி மேஜிக்

மும்பை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் செப்டம்பர் 19ம் தேதி தொடங்க அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. செப்டம்பர் 28 அன்று காலிறுதியில் விளையாடுகிறது. அரையிறுதி அக்டோபர் 1ம்தேதி அன்றும், இறுதிப்போட்டி அக்டோபர் 3 அன்றும் நடைபெற உள்ளது. அதே அக்டோபர் 3ம்தேதியன்று, இந்தியாவின் நியூ சண்டிகரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், ஒரே நாளில் இரண்டு இந்திய அணிகள் இரு வேறு நாடுகளில் களமிறங்கும்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி உள்ளிட்ட மூத்த வீரர்கள் விளையாட உள்ளனர். மறுபுறம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன், பும்ரா, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

1998க்கு பின்....

1998, செப்டம்பர் 12 அன்று ஒரே நாளில் கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளிலும், டொராண்டோவில் நடந்த சஹாரா கோப்பையிலும் இரண்டு வேறுபட்ட இந்திய கிரிக்கெட் அணிகள் விளையாடியது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதேபோன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது.