📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 18, 2026 11:34 AM

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 அதிகரிப்பு

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (செப் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவனுக்கு 1,160 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 145 ரூபாய் அதிகரித்து 14,155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தின (செப் 16) ஆபரண தங்கம் கிராம், 14,065 ரூபாய்க்கும், சவரன், 1,12,520 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (செப் 17), தங்கம் விலை கிராமுக்கு, 55 ரூபாய் குறைந்து, 14,010 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 440 ரூபாய் சரிவடைந்து, 1,12,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்றைய நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.