📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 25, 2026 05:03 AM

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைவு

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைவு

சென்னை: தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,135 ரூபாய்க்கும், சவரன், 1,13,080 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து, 14,000 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,080 ரூபாய் சரிவடைந்து, 1,12,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.