📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 08:05 AM

தங்கம் தான் ராதாவின் பலவீனம், அவரால் நிறைய பண நஷ்டம்

தங்கம் தான் ராதாவின் பலவீனம், அவரால் நிறைய பண நஷ்டம்

தங்கம் தான் ராதாவின் பலவீனம், அவரால் நிறைய பண நஷ்டம் - கண் கலங்கிய நடிகை அம்பிகா

எங்கள் தாயார் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எண்ணியதாகவும், ஆகையால் சமரசம் செய்ய பேச நினைத்தால் பேசுவோம் என்றும் நடிகை அம்பிகா கூறியுள்ளார்.

Published : September 23, 2026 at 4:21 PM IST

சென்னை: தங்கம் தான் ராதாவின் பலவீனம் என்றும், அவரால் அதிகளவு பண நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நடிகை அம்பிகா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நடிகை ராதா, தனது சகோதரியும், நடிகையுமான அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜூன நாயர் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் தனது காசோலைகளை திருடி, அவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தி ரூ.46 கோடி வரை மோசடி செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த புகார் குறித்து நடிகை அம்பிகா வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது சகோதரர் மல்லிகார்ஜீன நாயர் மற்றும் வழக்கறிஞர் பழனிவேல்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அம்பிகா, “இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவேன் என்று நான் என் வாழ்நாளில் எதிர்பார்க்கவில்லை. ராதா அளித்த புகார் குறித்து ஏன் அம்பிகா பேசவில்லை என நிறைய பேருக்கு கேள்விகள் இருக்கலாம்.

நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் பதிலளிக்க முடியவில்லை. ஏ.ஆர்.எஸ் கார்டன் குறித்து மறைந்த எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, அவர் தான் உங்களின் பெயரை வையுங்கள் என்றார். ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு குழந்தை போன்றது, நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. திடீரென ஒரு நாள் பார்க்கும்போது அதன் பெயர் பலகை மாற்றப்பட்டிருந்தது.‎அந்த கட்டடத்தில் என்னுடைய பங்கு அதிகமுள்ளது

அதுகுறித்து கடந்த ‎ஜூலை மாதம் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தோம், அப்போது சி.எஸ்.ஆர் கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட ‎வருமான வரி சோதனையில் தங்கம் கிடைத்தது, அதுகுறித்து கேள்வி எழுப்பினோம்.

‎தங்கம் என்றாலே ராதாவிற்கு ஆசை உள்ளது. தங்கத்தை பார்த்தால் அவர் ஒரு மாதிரி ஆகிவிடுவார். அவரிடம் என்னுடைய தங்கம் நிறைய உள்ளது. அதுகுறித்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

அப்படிப்பட்டவர் எப்படி காசோலையை விட்டுவிடுவார். இந்த விவகாரத்தில் மேலும் செல்லும்போது ராதாவிற்கு தான் சிக்கல் ஏற்படும். தவறு செய்துவிட்டு அவர்களே முந்திக் கொள்வது போன்று செயல்படுகின்றனர். ராதா தான் காசோலையை கொடுத்து, நிறுத்தி வைத்தார். ஆனால் காசோலை நிராகரிக்கப்பட்டதால் (check bounce) எனக்குதான் பணம் போனது. அப்படியானால் நான் தான் வழக்கு தொடுக்க வேண்டும்.

இது குடும்ப விவகாரம் வெளியே தெரிய வேண்டாம் என நினைத்தோம், ஆனால் அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. மேலும் நாங்கள் கமிஷனரை பார்த்து புகார் அளித்தோம். மதுரவாயல் காவல் நிலையத்தில் இருந்து ‎அழைத்தும் ராதா பேசவில்லை.

ஏ.ஆர்.எஸ் கார்டன் முறையாக பிரிக்கப்படவில்லை, அந்த வீட்டை ராதா அபகரித்துவிட்டார். எனக்கு மொத்தமாக 97 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது.

ஆனால் இந்த சொத்தில் இருந்து ‎அம்பிகா விலகிக் கொண்டது போல் சான்றிதழ் தயாரித்துள்ளனர். ‎வங்கியில் கடன் வாங்கியுள்ளனர். பார்ட்னர்ஷிப்பில் நான் இருக்கையில் அவரால் எப்படி வாங்க முடியும்? ‎எங்களின் புகாரை மறைக்க அவர்களே தயார் செய்து கொடுத்து புகார் இது. காவல்துறை அழைத்தபோது போகாமல் இப்போது செல்கிறார்கள்.

ராதாவுடன் சமரசம் பேசத் தயார்

ராதாவிற்கு திருவனந்தபுரத்தில் பல ஆயிரம் கோடி சொத்து உள்ளது. அதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் ஆனால் எங்களுக்கு உரிய சொத்தில் ஏன் இவ்வாறு செய்கிறார்? எங்கள் தாயார் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எண்ணினார். ஆகையால் சமரசம் செய்ய பேச நினைத்தால் பேசுவோம். ராதா என்னுடைய நல்ல தோழி என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.

‎இதுபோன்ற செயல்கள் அவராக செய்யவில்லை, அவரது கணவர் உள்ளிட்டோர் சொல்வதை கேட்டு இவ்வாறு நடக்கிறார்” என நடிகை அம்பிகா கண் கலங்கினார்.

தொடர்ந்து பேசுகையில், “என்னுடைய இன்ஸ்டாகிராமில் ’படிக்காதவன்’ படத்தில் வரும் ’பணம் காசக்கண்டுபுட்டா புலிக்கூட புல்லை தின்னும்’ என்னும் பாடலை ராதாவிற்கு தான் ஸ்டேட்டஸ் வைத்தேன்” என கூறினார்.

ராதா மீது அவதூறு வழக்கு - அம்பிகா

மேலும் பேசுகையில்,"காசோலையை நான் திருடியதாக ராதா சொன்னதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‎சின்ன வயதில் இருந்து என் சகோதரிகளுக்காக நிறைய செய்துள்ளேன். என்னை அவரது கணவர் ஒருமையில் பேசுகிறார், என்னை பேச அவர் யார்?. என்னாலும் பேச முடியும். இருப்பினும், என் தங்கை மீது வைத்துள்ள மரியாதைக்காக பேசவில்லை. ‎ராதா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும்" என்று அம்பிகா கூறினார்.