📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 26, 2026 09:00 PM

‘தமிழுக்கு பெருமை சேர்க்கும் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் நன்றி தெரிவிக்க வேண்டும்’

‘தமிழுக்கு பெருமை சேர்க்கும் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் நன்றி தெரிவிக்க வேண்டும்’

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது;-

“நாங்கள் தனித்தனியாக ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம். ஆனால் ஒட்டுமொத்தமாக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவோம் என்கிற ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில் தற்போது இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி பரிசளிக்கிறார். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற முறையில், தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் பிரதமருக்கு, முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் அவர் தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒன்று என்று குழப்பிக் கொண்டிருக்கிறார். அந்த குழப்பமெல்லாம் உங்களுக்கு தேவையில்லை. பா.ஜ.க.விடம் குறை சொல்வதற்கு எதுவுமே இல்லை என்பதற்காகவும், தன்னை சங்கி என்று சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து எதையாவது சொல்ல வேண்டுமே என்று முதல்-அமைச்சர் விஜய் பேசுகிறார்.

எனவே, அப்படி பேச வேண்டாம். நல்லது செய்தால் அதை பாராட்டுங்கள். நீங்கள் நல்லது செய்தால் நாங்கள் பாராட்டுறோம், தவறு செய்தால் விமர்சனம் செய்கிறோம். இந்த முறையைத்தான் நாங்கள் கையாளுகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.