📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 26, 2026 08:04 PM

ஜெம் வீரமணி விவகாரம்... தவறான தகவலை சொல்கிறார் முதல்வர் விஜய்; இபிஎஸ் குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி விவகாரம்... தவறான தகவலை சொல்கிறார் முதல்வர் விஜய்; இபிஎஸ் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு: ஜெம் வீரமணி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் விஜய் தவறான தகவலை வழங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் ஒரு தனியார் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்வர் விஜய் தேர்தல் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது அம்பலமாகி இருக்கிறது. ஜெம் வீரமணி கைதான விவகாரத்தில் முதல்வர் விஜய் தவறான தகவலை வழங்குகிறார்.

ஆகவே, இந்த தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சுமார் 250 கொலைகள் நடந்திருக்கின்றன. 300 பாலியல் சீண்டல்கள் நடந்து இருக்கின்றன. பல சிறுமிகள் இந்த பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் இந்த முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார். வீரவசனம் பேசினார் மேடையில் சிறுமிகளை சீரழித்து விட்டார்கள் என்று. இவருடைய ஆட்சியில் சிறுமிகளை சீரழித்தவர்களுக்கு என்ன தண்டனை பெற்றுத்தந்தார். என்ன நடவடிக்கை எடுத்தார்.

பல ஆட்சிகள் நடந்து இருக்கின்றன. எந்த ஆட்சியிலும் இந்த 4 மாத காலத்தில் 300 பெண்கள், சிறுமிகள், வயது முதிர்ந்தவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானது இந்த ஆட்சியில் தான். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த அரசு மீது எந்த அச்சமும் கிடையாது. போலீசார் மீது எந்த அச்சமும் கிடையாது. சர்வசாதாரணமாக கொலை நடக்கிறது. பாலியல் சீண்டல் சர்வ சாதாரணமாக நடக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.