📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 11:00 PM

தமிழ் சினிமாவுக்கு தனி ஓ.டி.டி. தளம்

தமிழ் சினிமாவுக்கு தனி ஓ.டி.டி. தளம்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ் சினிமாவுக்கான ஓ.டி.டி. தளம் அமைப்பது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும். இடைத்தேர்தல் முடிந்த பின் இதுகுறித்து நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம்.

நானும் இந்த குடும்பத்தில் ஒருத்தன். வி.ஐ.பி. 2-ம் பாகத்தில் நான் நடிக்கும்போது திட்டு வாங்கினேன். நான் அமைச்சராகி விட்டேனா? நான் சினிமாத் துறைக்கு விருது வழங்குகிறேனா என சில சமயம் எனக்கே தோன்றும்.

இதற்கெல்லாம் காரணமான முதலமைச்சருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் துறையில் இருந்து வந்தவர்தான் முதலமைச்சராக உள்ளார். இனி மாநில அரசின் சார்பாக விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

ஏற்கனவே வழங்கப்படாமல் உள்ள அனைத்து விருதுகளும் வழங்கப்படும். சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.